Rajinikanth : ரஜினி உடல்நிலை.. கூலி படத்திற்கு ஏதேனும் சிக்கல் வருமா.. படப்பிடிப்பை திட்டமிட்டபடி நடத்துவாரா லோகேஷ்!
Rajinikanth health : ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருப்பதால் கூலி படத்திற்கு ஏதேனும் சிக்கல் வருமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. ஆனால் லோகேஷ் கூலி படப்பிடிப்பை திட்டமிட்டபடி நடத்தி வருகிறாராம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து 'கூலி' படத்தில் நடித்து வருகிறார். இதற்காக விசாகப்பட்டினத்தில் நடந்து வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினி, கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை திரும்பினார்.
அடிவயிறுப் பகுதியில் ஏற்பட்ட வீக்கம்
இந்தநிலையில் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நடிகர் ரஜினிகாந்த் அவரது அடிவயிறுப் பகுதியில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று கூறப்பட்டது.
அதேபோல பரிசோதனைக்காக இதய சிகிச்சை நிபுணரிடம் அனுமதி கேட்டிருக்கும் காரணத்தால் முன்கூட்டியே அனுமதிக்கப்பட்டார் என்றும் தகவல் வெளியானது. இந்தநிலையில் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.