வேட்டையன் படக்குழுவின் புது முயற்சி! தமிழில் இது தான் முதல் முறையாம்! எல்லாரும் படம் பார்க்கலாம்!
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் அக்டோபர் 10 அன்று வேட்டையன் திரைப்படம் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் ரஜினி நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் அக்டோபர் 10 அன்று வேட்டையன் திரைப்படம் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் ரஜினி நடித்து வருகிறார். ஜெய்பீம் பட இயக்குநர் த. செ. ஞானவேல் இயக்கத்தில் உருவாகி உள்ள வேட்டையன் படத்தின் டிரெய்லர் வெளியானதில் இருந்து கதை குறித்தும், படம் பேசப்போக்கும் விசயங்கள் குறித்தும் சமூக வலைத் தளங்களில் அனல் பறக்க விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இப்படத்தின் முன்பதிவு தொடங்கியுள்ளது.
வேட்டையன் படத்தின் கதைக்களம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் சில தினங்களுக்கு முன்பு வெளியான வேட்டையன் திரைப்படத்தின் டிரைலர் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை கடந்து சென்றுக் கொண்டிருக்கிறது. மேலும் இப்படத்தின் இயக்குநர் த. செ. ஞானவேல் முதலில் இயக்கிய படமான ஜெய்பீம் முழுக்க சமூகநீதியை அடிப்படையாக கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான காவல் துறையின் அதிகாரப் போக்கை படமாக காண்பித்து இருந்தது.
இந்நிலையில் வேட்டையன் படத்தின் டிரைலர் என்கவுண்டர் செய்வதை ஆதரவு தெரிவிக்கும் வகையில் இருந்தது. இப்படி இருவேறு மாறுபட்ட கருத்துக்களை படமாக எடுத்தது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.
படக்குழுவின் புதிய முயற்சி
படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம் சார்பில் X தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில் படத்தின் புதிய முயற்சிகள் குறித்து ஒன்றை வெளியிட்டுள்ளது. வேட்டையன் படத்தின் காட்சிகள் ஆடியோ விளக்கத்துடனும், குளோஸ்ட் கேப்ஷன்களோடு வெளியாக உள்ளது. இந்த வசதியினால் பாரவைக் குறைபாடு உள்ளவர்களும், காது கேட்க இயலாதவர்களும் இந்த படத்தை எளிமையாக காண முடியும். சினிமாவை அனைவரும் அணுகும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து லைகா நிறுவனம் வெளியிட்ட பதிவில், ‘ஆடியோ விளக்கம் மற்றும் மூடிய தலைப்புகளுடன் முதல் தமிழ்ப் படமாக தடைகளை உடைத்தெறிந்த வேட்டையன்! சினிமாவை அனைவரும் அணுகும் வகையில் உருவாக்குதல்’ என பதிவிட்டிருந்தது.
ஆடியோ விளக்கம் & குளோஸ்ட் கேப்ஷன்
கண் பார்வை இல்லாதவர்கள் ஒரு படத்தை பார்க்கும் போது அதன் சத்தங்களை கேட்டே படத்தின் கதையை புரிந்து கொள்வார்கள். ஆனால் வசனங்களைத் தாண்டி காட்சியில் நடக்கும் மற்ற நிகழ்வுகள் குறித்து அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. இதனையடுத்து இந்த ஆடியோ விளக்கம் வாயிலாக திரைப்படத்தில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து விலக்கி கூறும். இதன் வாயிலாக ஒரு காட்சியில் வசனங்களை தாண்டி என்ன நடக்கிறது என்பதை விளக்க முடியும். உதாரணமாக காட்சியில் ஒரு திருடன் மெதுவாக நடந்து வந்தால் அது குறித்தான விளக்கம் இடம்பெறும்.
குளோஸ்ட் கேப்ஷன் என்பது படத்தை முழுவதும் விலக்கி காது கேளாதவர்களுக்கு புரியும் வகையில் கீழே வரிகள் வரும். இதன் வாயிலாக எளிமையாக படத்தில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து தெரிந்து கொள்ள முடியும். இதுவே தமிழ் படங்களில் முதன் முறையாக இந்த முறையில் வெளியாகும் படம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி அனைத்து தரப்பு ரஜினி ரசிகர்களை மேலும் குஷி படுத்தியுள்ளது.
டாபிக்ஸ்