Vijay: தி கோட் படத்துக்கு ஆடியோ லாஞ்ச் இல்லாததற்குக் காரணம் என்ன? அரசியல் நெருக்கடியா?: அர்ச்சனா கல்பாத்தி ஓபன் டாக்!-producer archana kalpathi explains why the audio launch was not held for the goat - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vijay: தி கோட் படத்துக்கு ஆடியோ லாஞ்ச் இல்லாததற்குக் காரணம் என்ன? அரசியல் நெருக்கடியா?: அர்ச்சனா கல்பாத்தி ஓபன் டாக்!

Vijay: தி கோட் படத்துக்கு ஆடியோ லாஞ்ச் இல்லாததற்குக் காரணம் என்ன? அரசியல் நெருக்கடியா?: அர்ச்சனா கல்பாத்தி ஓபன் டாக்!

Marimuthu M HT Tamil
Sep 02, 2024 07:46 PM IST

Vijay: தி கோட் படத்துக்கு ஆடியோ லாஞ்ச் இல்லாததற்குக் காரணம் என்ன? அரசியல் நெருக்கடியா?: அர்ச்சனா கல்பாத்தி ஓபன் டாக்!

Vijay: தி கோட் படத்துக்கு ஆடியோ லாஞ்ச் இல்லாததற்குக் காரணம் என்ன? அரசியல் நெருக்கடியா?: அர்ச்சனா கல்பாத்தி  ஓபன் டாக்!
Vijay: தி கோட் படத்துக்கு ஆடியோ லாஞ்ச் இல்லாததற்குக் காரணம் என்ன? அரசியல் நெருக்கடியா?: அர்ச்சனா கல்பாத்தி ஓபன் டாக்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து ‘ தி கோட்’ திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தி கோட் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நியூஸ் 18 தமிழ்நாடு யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் தொகுப்பு பின்வருமாறு, ‘’

கேள்வி: நீங்கள் தி கோட் படம் பார்த்திருப்பீர்கள். அது எப்படி இருக்கிறது?

அர்ச்சனாவின் பதில்: நாங்கள் மனதில் என்ன நினைத்துப் படம் எடுத்தோமோ அது வந்துருக்குன்னு நினைக்கிறோம். நிறைய எஃபர்ட் போட்டு, நிறைய இடங்களுக்குப் போய், நிறைய நாடுகளில் படமாக்கப்பட்ட படம். எனக்குப் பிடிச்ச அளவுக்கு, ரசிகர்களுக்கும் பிடிச்சால் நன்றாக இருக்கும்.

கேள்வி: படத்தில் விஜய்-க்கு எத்தனை ரோல் இருக்கிறது?

பதில்: அதனால் தான் படம் குறித்த ஆச்சரியமான விசயங்களைப் பேசாமல் இருக்கிறோம். டிரெய்லர் பார்த்து அப்பா, மகன் என்று சரியாகச் சொல்லிவிடுவீங்களா?

கேள்வி: விஜய் சார் மட்டும் இந்தப் படத்தில் இல்லாமல் நிறைய கதாபாத்திரங்கள் நடிக்கின்றனர். அவர்களுக்குண்டான திரைப்பகிர்வு சரியாக இருக்கிறதா?

பதில்: எல்லாருக்கும் சரிசமமான திரைப்பகிர்வு இருக்கும்ன்னு சொல்லமுடியாது. ஆனால், ஒவ்வொரு கதாபாத்திரத்தும் தாக்கத்தை ஏற்படுத்தும். Screen Space சிலருக்கு அதிகமாக இருக்கலாம். சிலருக்கு கம்மியாக இருக்கலாம்.  ஆனால், எல்லாருக்கும் முக்கியத்தும் சரிசமமாக இருக்கும். 

கேள்வி: திரிஷா மேம், அஜித் சார் நடிச்சிருக்காருன்னு சொல்றாங்களே?

பதில்: இருக்காங்களா? எங்களைப் பொறுத்தவரை, தி கோட் பட பூஜையில் கலந்துகொண்டவர்கள் தான், இப்படத்தில் நடித்த படக்குழுவினர். 

கேள்வி: விஜய்க்கும் பிரபுதேவாவுடைய இணையில் டான்ஸ் எப்படி வந்திருக்கு?

பதில்: ரொம்ப நன்றாக வந்திருக்கு. நேரில் பார்க்கும்போது அந்த எனர்ஜி செமையா இருக்கும்ல. அதை உணர்ந்தோம்.

கேள்வி: படத்தின் ட்ரெய்லரில் கில்லி படத்தில் வந்த முருகன் பாட்டு வந்தது? அது மாதிரி விஜய் சார் நடிச்ச படங்களில் இருந்து சில நினைவூட்டல் காட்சிகள் இருக்குமா?

பதில்: அங்கங்க இருக்கும். அதைத்தாண்டி, இடையில் கொஞ்சம் மிஸ்ஸான விஜய் சாரின் குழந்தைத்தனம், கொஞ்சல் எல்லாம் இருக்கிற மாதிரி இந்த கதை அமைஞ்சது. எனவே, அதைப் பயன்படுத்திக்கிட்டோம்.

கேள்வி: டீ- ஏஜிங் லுக் விஜய்க்கு பொருந்தும் நினைச்சீங்களா?

பதில்: டீ-ஏஜிங்(De-aging)பொறுத்தவரைக்கும், அந்த கதாபாத்திரம் 23 வயதில் இருந்து 25 வயதுக்குள் இருக்கும் கதாபாத்திரம். விஜய் சாரை அந்த வயதில் காட்டுறதுக்காக நிறைய மெனக்கெட்டிருக்கோம். அமெரிக்கா போய், நிபுணர்கள்ட்ட பேசி, அதன்பின் தான் அந்த லுக் பண்ணுனோம். ஒரு படத்தில் விஎஃப்எக்ஸ் நன்றாக இருந்தால், அது விஎஃப் எக்ஸ் மாதிரியே தெரியாது. சில விமர்சனங்கள் கூட வந்துச்சு. ட்ரெய்லர் மற்றும் மட்ட சாங்கில் பார்ப்பதுதான் இறுதி வெர்ஷன்.

கேள்வி: டீ-ஏஜிங் லுக் பார்த்து விஜய் சார் சொன்னது என்ன?

பதில்: விஜய் சார் முதலில் சொன்னதே, ரொம்ப எக்ஸ்பிரிமென்ட் பண்ணாதீங்க. என்னை மாதிரியே இருந்தால் போதும்னு தான். பின்ன, அந்த லுக் ரொம்ப பிடிச்சிருக்கு.

கேள்வி: விஜய் சார் படம் என்றாலே, ஆடியோ லாஞ்சில் குட்டி ஸ்டோரி சொல்வாங்கன்னு ஒன்று இருக்கு. ஆடியோ லாஞ்ச் ஏன் வைக்கவில்லை. அடுத்த மாதம் மாநாடுக்கு ஹைப் ஏத்துறதுக்காகவா?

பதில்: படத்துக்கும் பாலிடிக்ஸுக்கும் சம்பந்தமே இல்லை. படத்தைப் படமாகத்தான் பார்க்குறோம். இந்தப் படத்துக்கு என்ன தேவையோ, அந்த பாதையில் தான் போய்ட்டிருக்கோம். படம் பார்க்கும்போது தான் தெரியும், இது என்ன ஸ்கேலில் எடுத்தபடம் என்று. படக்குழுவினரும் நடிகர்களும் எவ்வளவு கஷ்டப்பட்டு வொர்க் பண்ணியிருக்காங்கன்றது படம் பார்க்கும்போது தான் உங்களுக்குப் புரியும். எல்லோருமே நிறைய நேரம் ஒதுக்கி பண்ணியிருக்கோம்’’ என தி கோட் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பதிலுரைத்தார். 

நன்றி: நியூஸ் 18 தமிழ்நாடு யூட்யூப்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.