Ghilli: அடம் பிடித்த விஜய்.. ஓடிப்போய் ஒக்கடு உரிமையை வாங்கிய அப்பா! - ரீமேக்கில் சாதனை படைத்த கில்லி!-producer am ratnam latest interview about making of okkadu movie remake thalapathy vijay trisha ghilli movie - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ghilli: அடம் பிடித்த விஜய்.. ஓடிப்போய் ஒக்கடு உரிமையை வாங்கிய அப்பா! - ரீமேக்கில் சாதனை படைத்த கில்லி!

Ghilli: அடம் பிடித்த விஜய்.. ஓடிப்போய் ஒக்கடு உரிமையை வாங்கிய அப்பா! - ரீமேக்கில் சாதனை படைத்த கில்லி!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 29, 2024 04:56 PM IST

Ghilli: கில்லி படம் நிச்சயமாக வெற்றி பெறும். ஆனால், இந்த படத்தின் வெற்றி, அவரது அடுத்த படத்தின் வெற்றிக்கு பேருதவியாக இருக்கும். ஆகையால், நீங்கள் எனக்கு இந்த படம் செய்தால், இரண்டு படங்களுக்கான கால்சீட்டை தாருங்கள் என்றேன்.

Ghilli: அடம் பிடித்த விஜய்.. ஓடிப்போய் ஒக்கடு உரிமையை வாங்கிய அப்பா! - ரீமேக்கில் சாதனை படைத்த கில்லி!
Ghilli: அடம் பிடித்த விஜய்.. ஓடிப்போய் ஒக்கடு உரிமையை வாங்கிய அப்பா! - ரீமேக்கில் சாதனை படைத்த கில்லி!

ஒக்கடு உரிமை வேண்டும் 

அவர் பேசும் போது, “கில்லி திரைப்படம் தெலுங்கில் வெளியான ஒக்கடு திரைப்படத்தின் ரீமேக் ஆகும். அந்தத் திரைப்படத்தை விஜயும், அவரது அப்பாவான எஸ்ஏசியும் பார்த்தார்கள். அந்த படம் விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டது. இதையடுத்து விஜய் அவரது அப்பாவிடம், ஒக்கடு உரிமையை நாம் வாங்கிவிடலாம் என்று கூறி இருக்கிறார். இந்தப்படத்தை எடுப்பதற்கு ஏ எம் ரத்தினம்தான் சரியாக இருப்பார் என்று கருதி, என்னை அழைத்தார்.

படத்தை பார்த்த நான் எஸ்.ஏ.சியிடம், விஜய் இந்த படத்தில் நடிக்கும் பொழுது, படம் நிச்சயமாக வெற்றி பெறும். ஆனால், இந்த படத்தின் வெற்றி, அவரது அடுத்த படத்தின் வெற்றிக்கு பேருதவியாக இருக்கும். ஆகையால், நீங்கள் எனக்கு இந்த படம் செய்தால், இரண்டு படங்களுக்கான கால்சீட்டை தாருங்கள் என்றேன். 

தரணி உள்ளே வந்தது எப்படி? 

நான் ஏற்கனவே தரணியை வைத்து தூள் என்ற படத்தை அப்போது எடுத்திருந்தேன். அதனால்தான் தரணியை அழைத்து, அந்த படத்தை இயக்க வைத்தேன். கில்லி படத்தை பொருத்தவரை, தெலுங்கில் அந்த திரைப்படம் கிளாஸாக இருக்கும். ஆனால், தமிழில் மாஸாக இருக்கும். படத்தில் இடம்பெற்ற நடிகர் விஜயின் வீடும், அதை சுற்றி இருந்த இடங்களையும், நாங்கள் மிகப்பெரிய செட்டாக வடிவமைத்தோம். மொத்தம் 65,000 sqft -ல் மொட்டை மாடி போன்று அதனை நாங்கள் வடிவமைத்தோம்.

அப்போது அந்த செட்டும் ரெடியாகவில்லை. வீட்டுக்குள் எடுக்க வேண்டிய காட்சிகளை நாங்கள் எடுத்தோம். அப்போதுதான் விஜயின் அம்மாவாக யாரை நடிக்க வைக்கலாம் என்ற கேள்வி எழுந்தது.

தெலுங்கில் மகேஷ்பாபுவின் அம்மாவாக நடித்த கீதா, அப்போது அமெரிக்காவில் இருந்தார். அதனால், அவரால் முடியாது என்று சொல்லிவிட்டார். அதனை தொடர்ந்து நடிகை சீதாவை நடிக்க வைக்க முயற்சி செய்தோம். தேதி பிரச்சினையால் அவராலும் நடிக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் ஜானகி செபாஸ்டியனை நாங்கள் கமிட் செய்தோம். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது, அந்த படத்தில் இடம் பெற்ற அம்மா கதாபாத்திரம், ஒன்று ஸ்டார் நாயகியாக இருக்க வேண்டும், அப்படி இல்லை என்றால் இயல்பாகவே ஒரு தாய் போல இருக்க வேண்டும் என்று நினைத்தோம். அதற்காகத்தான் அவரை கமிட் செய்தோம்.” என்று பேசினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.