தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  The Kerala Story: தி கேரள ஸ்டோரி கதை உண்மை என நிரூபித்தால் ரூ 1 கோடி பரிசு; தயாரிப்பாளர் அறிவிப்பு

The Kerala Story: தி கேரள ஸ்டோரி கதை உண்மை என நிரூபித்தால் ரூ 1 கோடி பரிசு; தயாரிப்பாளர் அறிவிப்பு

Aarthi V HT Tamil
May 03, 2023 12:02 PM IST

தி கேரள ஸ்டோரி பட இயக்குநருக்கு தயாரிப்பாளர் ஆதம்பாவா சவால் விடுத்து உள்ளார்.

தி கேரள ஸ்டோரி
தி கேரள ஸ்டோரி

ட்ரெண்டிங் செய்திகள்

அந்தவகையில் தற்போது ‘தி கேரள ஸ்டோரி’ என்கிற திரைப்படம் ஒன்று சர்ச்சையை கிளப்பி உள்ளது. இப்படம் வரும் மே 5ஆம் தேதி வெளியாக உள்ளது. படத்தை சுதிப்தோ சென் இயக்கியுள்ளார்.

கேரளாவை சேர்ந்த அப்பாவி இந்துப்பெண்களை மூளைச்சலவை செய்து இஸ்லாமுக்கு மதம் மாற்றி, பின்னர் ஐஎஸ்ஐ தீவிரவாத அமைப்புக்கு அனுப்பப்படுவதாகவும் கேரளாவை சேர்ந்த 32000 பெண்கள் இந்த வலையில் சிக்கியுள்ளதாகவும் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தப்படம் உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

மேலும் சமீபத்தில் வெளியான இந்தப்படத்தின் ட்ரைலரும் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனை தொடர்ந்து இந்தப்படத்திற்கு கண்டனங்களும் படத்தை வெளியிட தடை கோரியும் நாடெங்கிலும் எதிர்ப்புக்குரல்கள் எழுந்துள்ளன.

இந்தநிலையில் தமிழில் வெளியான ஆன்டி இண்டியன் பட தயாரிப்பாளரும், அமீர் நடிப்பில் விரைவில் வெளிவரவுள்ள ‘உயிர் தமிழுக்கு படத்தின் இயக்குநருமான ஆதம் பாவா இந்த படத்திற்கு தனது கடுமையான எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதச்சார்பின்மை கொண்ட இந்தியாவில் திட்டமிட்டு பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாக இந்த படத்தின் டிரைலர் அமைந்திருக்கிறது. பிரிவினைவாதத்தை தூண்டும் சில அமைப்புகள் பிரசாரம் செய்வதற்காக எடுக்கப்பட்ட படம்தான் இந்த 'தி கேரள ஸ்டோரி'.

டிரைலரில் கூறப்பட்டுள்ளது போல கேரளாவைச்சேர்ந்த 32,000 பேர் இஸ்லாம் மதத்திற்க்கு மாறி ஐ எஸ் ஐ எஸ் ISIS குழுவில் சேர்ந்ததற்கான ஆதாரத்தை படத்தின் இயக்குநர் சுதிப்தோ சென் கொடுத்தால் அவருக்கு ரூ 1 கோடி பரிசு அளிக்கிறேன்” என்று சவால் விடுத்துள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

IPL_Entry_Point

டாபிக்ஸ்