தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Priya Bhavani Shankar: பங்களா… இப்போ ரெஸ்டாரன்ட்… கலக்கும் பிரியா பவானி சங்கர்

Priya Bhavani Shankar: பங்களா… இப்போ ரெஸ்டாரன்ட்… கலக்கும் பிரியா பவானி சங்கர்

Aarthi V HT Tamil
Jan 22, 2023 12:12 PM IST

நடிகை பிரியா பவானி சங்கர் புதிய ரெஸ்டாரன்ட் தொடங்கி உள்ளார்.

பிரியா பவானி சங்கர்
பிரியா பவானி சங்கர்

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான குருதி ஆட்டம், யானை, ஓ மணப்பெண்ணே, திருச்சிற்றம்பலம் என வரிசையாக நல்ல கதை உள்ள படங்களில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்துவிட்டார் பிரியா பவானி சங்கர். இவர் சில படங்களில் குடும்ப பாங்காக வந்த காரணத்தினால் அதே மாதிரியான கதைகளிலேயே அவரை பார்க்க ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகிறார்கள்.

இவர் கடந்த ஆண்டு இறுதியில் பீச் ஓரத்தில் புது வீடு வாங்கி இருப்பதை அறிவித்து இருந்தார். தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை அவர் பதிவிட்டார்.

அதில் , “ எங்களுக்கு 18 வயது இருக்கும் போது கடற்கரை இருப்பது மிகவும் விருப்பமானதாக இருந்தது. அப்போது நிலாவை பார்த்துக் கொண்டே இங்கே ஒரு வீடு கட்ட வேண்டும் என்று கனவு கண்டோம். அந்த கனவு இன்று நனவாகி, எங்கள் புதிய வீட்டில் அடியெடுத்து வைக்கிறோம் ” என குறிப்பிட்டார்.

இந்நிலையில் பிரியா பவானி சங்கர் தற்போது புதிய ரெஸ்டாரன்ட் தொடங்கி உள்ளார். இது குறித்த அறிவிப்பை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து உள்ளார். LIAM’s Diner என அதற்கு பெயரிடப்பட்டு உள்ளது.

அதில், " எங்களுடைய சொந்த உணவகம் இது எப்போதும் கனவாக இருந்து வருகிறது. நாள் நெருங்கி வருவதால் நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன்.

நாங்கள் எங்கள் கனவை உயிர்ப்பிக்கிறோம், உங்கள் அனைவருக்கும் சேவை செய்ய காத்திருக்க முடியவில்லை. LIAM's Diner - விரைவில் சேவை” எனக் குறிப்பிட்டு உள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் முதலில் வீடு, இப்போது ரெஸ்டாரன்டா என வியந்து பார்த்து வருகின்றனர்.

இவர் கைவசம் தற்போது பொம்மை, அகிலன், ருத்ரன், பத்து தல, டிமான்ட்டி காலனி 2 போன்ற படங்கள் உள்ளன.

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்