Prithviraj Health: வலியுடன் போராடி வருகிறேன் - பிருத்விராஜ் உருக்கம்
நடிகர் பிருத்விராஜ் தனது உடல்நிலை குறித்த அப்டேட்டை கூறி உள்ளார்.

பிருத்விராஜ்
நடிகர் பிருத்விராஜ் தற்போது விளையாத் புத்தா படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஜெயன் நம்பியார் இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பி கேரளாவில் உள்ள மறையூரில் படமாக்கப்பட்டு வருகிறது. அங்கு அந்தரத்தில் தொங்கிய படி பிருத்விராஜ் சண்டையிடும் ஆக்ஷன் காட்சி படமாக்கப்பட்டு வந்தது. இதில் எதிர்பாராத பிருத்விராஜுக்கு விபத்து ஏற்பட்டது.
அவரது காலில் காயம் ஏற்பட்டு கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது காயம் குறித்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வந்த நிலையில், ரசிகர்கள் விரைவில் பிருத்விராஜ் குணமடைய வேண்டும் என அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வந்தனர்.
