தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Viveka: காதல் எனும் ஜோருல, ஊ சொல்றீயா மாமா- டிரெண்டிங் கவிஞர் விவேகா பிறந்தநாள்

HBD Viveka: காதல் எனும் ஜோருல, ஊ சொல்றீயா மாமா- டிரெண்டிங் கவிஞர் விவேகா பிறந்தநாள்

Marimuthu M HT Tamil
Sep 10, 2023 04:24 AM IST

தமிழ் சினிமா பாடலாசிரியர் விவேகா பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

கவிஞர் விவேகா
கவிஞர் விவேகா

ட்ரெண்டிங் செய்திகள்

பல ஃபிளாப் படங்களில்கூட, பாடல்கள் வெற்றிபெற்று, அப்படத்தை நினைவுகூர வைக்கின்றன எனலாம். அப்படி பல பாடல்களை ரசிகர்களுக்கு ஜனரஞ்சகமான முறையில் எழுதியவர் தான், பாடலாசிரியர் விவேகா.

பிறப்பும் எழுத்து ஆர்வமும்: கவிஞர் விவேகா, திருவண்ணாமலையில் 1975ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி பிறந்தவர். தமிழ் சினிமாவில் 1999ஆம் ஆண்டு வெளியான 'நீ வருவாய் என' என்னும் திரைப்படத்தில் எஸ்.ஏ. ராஜ்குமார் இசையில், ‘பூங்குயில் காற்று பிடிச்சிருக்கா பூங்காற்றே பிடிச்சிருக்கா’ எனும் பாடலை எழுதி, அறிமுகமானார். இப்பாடல் தந்த வெற்றி, அவரை தொடர்ச்சியாக இயங்க வைத்தது. இதனைத் தொடர்ந்து யுவன் சங்கர் ராஜாவின் இசையில், உனக்காக எல்லாம் உனக்காக திரைப்படத்தில் கிளியோபாட்ரா என்னும் பாடலையும் ‘எதற்காக எல்லாம் செய்தேன் அன்பே உனக்காக’ என்னும் பாடலையும் ‘துள்ளி துள்ளி’ என்னும் பாடலையும் எழுதி ரசிகர்களை ஈர்த்தார். இதைத்தொடர்ந்து 2000ஆம் ஆண்டு, 'வானத்தைப்போல’ திரைப்படத்தில் கவிஞர் விவேகா எழுதிய ‘மைனாவே மைனாவே’ என்னும் பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்தது. பின், 2002ஆம் ஆண்டு, இயக்குநர் ஹரி அறிமுகமான ’தமிழ்’ என்னும்பெயர்கொண்ட திரைப்படத்தில் பரத்வாஜ் இசையில் 'காசு இருக்கும் ஜோருல, காதலென்னும் திமிருல பசங்கள தான் சுத்தி வரீங்க’ என இவர் எழுதிய பாடல், அன்றைய இளசுகள் இடையே குப்பென பற்றிக்கொண்டது. எங்கும் ஒலித்தது.

ட்ரெண்டைப் பிடித்த கவிஞர்: பின், ரன் திரைப்படத்தில் ‘மின்சாரம் என் மீது பாய்கின்றதே’, வின்னர் திரைப்படத்தில் ‘கோழி கொக்கர கோழி கொண்டை சேவ கோழி, ராத்திரியில் நீ காத்திரு நீ கொஞ்சிக்கொள்ள வாடி',தாஸ் திரைப்படத்தில் 'சக்கைப்போடு போட்டாளே சவுக்கு கண்ணால’;திருவிளையாடல் ஆரம்பத்தில் 'விழிகளில் விழிகளில் விழுந்துவிட்டாள், எனக்குள் எனையே’, ஆகியப் பாடல்களை எழுதி தமிழ் ரசிகர்களின் மனதில் நாற்காலிபோட்டு அமர்ந்தார், கவிஞர் விவேகா. பின், சந்தோஷ் சுப்ரமணியம் திரைப்படத்தில் ‘ எப்படி இருந்த என் மனசு அட இப்படி மாறிபோகிறதே உன் கண்ணில் என்ன காந்தம் இருக்கிறதா’ ஆகியப் பாடலையும், ‘அமெரிக்கா என்றாலும் ஆண்டிபட்டி என்றாலும்’ என்னும் பாடலையும் எழுதி, ஹிட்டடிக்க செய்தார், விவேகா.

90ஸ் கிட்ஸ்களைக் கவர்ந்தவர்: வில்லு திரைப்படத்தில் ’டாடி மம்மி வீட்டில் இல்ல, தடை போட யாரும் இல்ல’ என்னும் பாடலையும், மாசிலாமணியில் ‘சிக்கு சிக்கு பூம் பூம்’, தோரணை படத்தில்  ‘வெடி வெடி சரவெடி’, வேட்டைக்காரன் திரைப்படத்தில் ‘ஒரு சின்ன தாமரை’, கந்தசாமி திரைப்படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதி 2009ஆம் ஆண்டில் பல தொடர் ஹிட்டுகளைக் கொடுத்தவர்,விவேகா. இப்படி இவர் பல பாடல்களைத் தொடர்ந்து எழுதி வந்தார். 

2K கிட்ஸ்களையும் முணுமுணுக்கவைத்தவர்: புஷ்பா படத்தின் அனைத்து பாடல்களையும், கவிஞர் விவேகா எழுதியிருந்தார். ஏ சாமி, ஏ சாமி; ஊ சொல்றீயா மாமா.. ஊ ஊ சொல்றீயா மாமா, பார்வை கற்பூர தீபமா ஸ்ரீவள்ளி என இவரின் பாடல்கள், அத்தனையும் ஹிட்டாகின. சிறுகுழந்தைகளும் முணுமுணுத்தனர். 

அத்தகைய டிரெண்டிங் கவிஞர் - பாடலாசிரியர் விவேகா இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார். வாழ்த்துகள் கவிஞரே!

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்