Cook With Comali: இதைப் பண்ணலன்னா சண்டை தான் வரும்.. எனக்கு இது மட்டும் தெரியும்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள் ஓபன் டாக்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Cook With Comali: இதைப் பண்ணலன்னா சண்டை தான் வரும்.. எனக்கு இது மட்டும் தெரியும்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள் ஓபன் டாக்

Cook With Comali: இதைப் பண்ணலன்னா சண்டை தான் வரும்.. எனக்கு இது மட்டும் தெரியும்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள் ஓபன் டாக்

Malavica Natarajan HT Tamil
Oct 03, 2024 09:39 PM IST

Cook With Comali: குக் வித் கோமாளிநிகழ்ச்சியில் பிரியங்காவிற்கும் மணிமேகலைக்கும் நடந்த சண்டை குறித்து அவர்கள் தான் பேச வேண்டும் என பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்துவரும் சரண்யா கருத்து தெரிவித்துள்ளார்.

Cook With Comali: இதைப் பண்ணலன்னா சண்டை தான் வரும்.. எனக்கு இது மட்டும் தெரியும்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள் ஓபன் டாக்
Cook With Comali: இதைப் பண்ணலன்னா சண்டை தான் வரும்.. எனக்கு இது மட்டும் தெரியும்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள் ஓபன் டாக்

இதுகுறித்து பேசிய அவர், அந்த சம்பவம் நடந்த அன்று நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் செட்டில் தான் இருந்தேன். ஆனால், அவர்களுக்குள் என்ன நடந்தது என எங்களுக்கு சரியாக தெரியாது. ஆனால் அங்கு ஏதோ சரியாக இல்லை என்பது மட்டும் தெரிந்தது. இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து தயாரிப்பு நிறுவனம் பேச வேண்டும் எனக் கூறியுள்ளார்.

குக் வித் கோமாளி

விஜய் டிவியின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி முக்கிய பங்காற்றி வருகிறது. கடந்த 4 சீசன் வரை செஃப் வெங்கடேஷ்பட்- தாமு கூட்டணியில் மக்களுக்கு சிரிப்பை வாரி வழங்கி வந்தநிலையில், அந்தக் கூட்டணி முறிந்து வெங்கடேஷ் பட் சன் டிவிக்கு சென்றுவிட்டார். இதையடுத்து நிகழ்ச்சிக்கு புதிய நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் வந்தார். இவர் நிகழ்ச்சியிலும் பங்கேற்பாளர்களுடனும் சகஜமாக பழகவே நேரம் எடுத்த காரணத்தால் இந்த சீசன் ஆரம்பம் முதலே சற்று தொய்வாக காணப்பட்டது.

பிரியங்கா- மணிமேகலை

இதற்கிடையில், தொகுப்பாளர் மணிமேகலைக்கும் பங்கேற்பாளர் பிரியங்காவிற்கும் இடையே மோதல் வெடித்து சோசியல் மீடியா வரை சென்றது. இதனால், பலரும் இவ்விவகாரம் தொடர்பாக கருத்துகளை பகிர்ந்தும் பதிவிட்டும் வருகின்றனர்.

பிரியங்கா தன்னை பணி செய்ய முடியாமல் தடுத்து வருகிறார். தனக்கு சுயமரியாதை தான் முக்கியம் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் மணிமேகலை. அத்தோடு நில்லாமல், குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதுடன், நான் பிச்சை எடுத்தாவது பிழைத்துக் கொள்வேன் என ஆவேசமாக கூறினார். அத்துடன் நில்லாமல், விஜய் டிவி நிர்வாகம் பிரியங்காவிற்கு ஆதரவாக நிற்கிறது. விஜய் டிவியில் உள்ளவர்கள் காசு இருக்கும் பக்கம் தான் போவார்கள். அங்குள்ள அனைவரும் பிரியங்காவிற்கு சொம்பாக இருக்கின்றனர். அவர்களுக்கு என்ன மரியாதை இருக்கிறது என பல கருத்துகளை கூறி இந்தப் பிரச்சனையை முடிக்க விடாமல் தொடர்ந்தார்.

திருப்பி அடித்த பிரபலங்கள்

இந்த விவகாரத்தில் முதலில் யார் பக்கமும் ஆதரவு தெரவிக்காமல், இது தனிப்பட்ட இருவருக்கான பிரச்சனை, அவர்களே பேசி இதை முடித்துக் கொள்வர் என மாகாபா ஆனந்த், புகழ், வெங்கடேஷ் பட் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தனர். ஆனால், மணிமேகலை பிரியங்காவிற்கு ஆதரவு அளிப்பவர்கள் குறித்து அவதூறாக பேசிய நிலையில், மாகாபா ஆனந்த், டிஜே பிளாக், சரத், அமீர், வனிதா என பலரும் கொதித்து எழுந்தனர். மணிமேகலை முதிர்ச்சி இல்லாமல் பேசி வருகிறார் எனவும் கூறி வந்தனர்.

தங்கமயிலின் கருத்து

இந்நிலையில், பிரயங்காவிற்கும் மணிமேகலைக்கும் பிரச்சனை நடந்த அன்று நிகழ்ச்சியில் இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சரண்யா, இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், குக் வித் கோமாளி பிரச்சனையில் நிறைய பேர் பிரியங்காவின் பர்சனல் லைஃப் பத்தி பேசி கமெண்ட் செய்ததையும் பார்த்தேன். பிரியங்காவிற்கு ஆதரவாக பேசியவர்களை சொம்புகள் என மணிமேகலை கூறியதையும் பார்த்தேன். இந்த சம்பவம் நடக்கும்போது அவர் அங்கே இருந்தேன். 

பிரியங்கா மற்றும் மணிமேகலைக்கு இடையே ஏற்பட்ட சண்டைக்கு முழு முதல் காரணம் என்ன என்பது குறித்து பார்வையாளர்களான நமக்கு தெரியாது. மேலும் இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட இருவரும் தயாரிப்பு தரப்புடன் அமர்ந்து பேசி பிரச்சனையை தீர்த்துக் கொண்டிருக்க வேண்டும். அல்லது அவர்களுடன் சண்டை போட்டிருக்க வேண்டும். 

அந்த நேரத்தில் நான் அங்கே இருந்தாலும் எந்தமாதிரியான சூழலில் மணிமேகலை இந்த முடிவை எடுத்தார் என்பதை என்னால் ஜட்ஜ் செய்ய முடியவில்லை. நான் அங்கே சென்றபோது சூழல் சரியில்லை என்பது மட்டும் நன்றாக தெரிந்தது எனக் கூறினார். மேலும் மணிமேகலையும் பிரியங்காவும் தான் இந்த பிரச்சனையை பேசி சரிசெய்ய முடியும் என்றும் கூறினார்.

Whats_app_banner
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.