Manimegalai: பிரியங்கா Vs மணிமேகலை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் யார் மேல் தவறு? - ஓபனாக பேசிய மாகாபா-anchor makapa anand statement about manimegalai and vj priyanka issue - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Manimegalai: பிரியங்கா Vs மணிமேகலை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் யார் மேல் தவறு? - ஓபனாக பேசிய மாகாபா

Manimegalai: பிரியங்கா Vs மணிமேகலை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் யார் மேல் தவறு? - ஓபனாக பேசிய மாகாபா

Aarthi Balaji HT Tamil
Sep 16, 2024 06:29 PM IST

Manimegalai: நாம் ஒரு காட்டுக்குள் சென்று கொண்டிருக்கும் போது அங்கு இரண்டு யானைகள் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் அதை பார்த்து நாம் ஒதுங்கி சென்று விட வேண்டும்.

பிரியங்கா Vs மணிமேகலை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் யார் மேல் தவறு? - ஓபனாக பேசிய மாகாபா
பிரியங்கா Vs மணிமேகலை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் யார் மேல் தவறு? - ஓபனாக பேசிய மாகாபா

இதனிடையே பிரியங்காவுடன் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும், மாகாபா இன்று ( செப் 16 ) கிரிக்கெட் அகாடமியின் தொடக்க விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் சிலர்,  பிரியங்கா மற்றும் மணிமேகலை விவகாரம் தொடர்பான கேள்வியை எழுப்பினார்கள். 

மாகாபா பேட்டி

அதற்கு மாகாபா ஆனந்த் கூறுகையில், ” மணிமேகலை மற்றும் பிரியங்கா பங்கேற்று வரும் அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளவில்லை. அதனால் என்னால் நேரடியாக பார்க்காமல் எந்த கருத்தை சொல்ல முடியாது.

நாம் ஒரு காட்டுக்குள் சென்று கொண்டிருக்கும் போது அங்கு இரண்டு யானைகள் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் அதை பார்த்து நாம் ஒதுங்கி சென்று விட வேண்டும். அதை விட்டு நான் சென்று அவற்றை சமாதானப்படுத்த முயன்றால் நம்மை நசுக்கி விடும் “ என்று தெரிவித்தார்.

மணிமேகலை பேச்சு

முன்னதாக நிகழ்ச்சியில் இருந்து விலகியது தொடர்பாக மணிமேகலை பேசுகையில், “ மிகுந்த நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் நான் எப்பொழுதும் எனது 100% முயற்சிகளையும் கடின உழைப்பையும் குக் வித் கோமாளிக்கு கொடுத்திருக்கிறேன். 2019 ஆம் ஆண்டு, நவம்பரில் இருந்து குக் வித் கோமாளி என்னும் ஸ்ட்ரெஸ் பஸ்டர் நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது இருந்தே என் உழைப்பைத் தந்திருக்கிறேன்.

சுயமரியாதை முக்கியம்

ஆனால், சுய மரியாதையைவிட முக்கியமானது எதுவுமில்லை! என் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் நான் அதைக் கண்டிப்பாகப் பின்பற்றுகிறேன். புகழ், பணம், தொழில், வாய்ப்புகள் அல்லது எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. சுய மரியாதை என்று வரும்போது எல்லாமே இரண்டாம் பட்சம்தான். அதனால் நான் குக் வித் கோமாளி சீசன் 5ல் இருந்து விலகுகிறேன்.

இந்த சீசனில் மற்றொரு பெண் தொகுப்பாளர் ஆதிக்கம் செலுத்தினார். குறிப்பாக தொகுப்பாளராக இருக்கும் ஒருவர் இந்த குக் வித் கோமாளி சீசன் 5ன் படி, நிகழ்ச்சியின் சமையல்காரராக செயல்பட வேண்டும். ஆனால், அவர் அதை அடிக்கடி மறந்து விடுகிறார். வேண்டுமென்றே என்னை வேலையைச் செய்யவிடாமல் தடுத்து, எனது ஆங்கரிங் என்னும் நெறியாள்கையில் குறுக்கிடுகிறார்.

நமது உரிமைகளைக்கேட்பதும், கவலையை எழுப்புவதும்கூட இந்த குக் வித் கோமாளி சீசன் 5ல் குற்றமாகிவிடும். ஆனால், என் மனது எப்போதும் எது சரியானதோ அதற்காக குரல் எழுப்பும். நான் யாரைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. பல எதிர்மறை மற்றும் சிலரின் ஆதிக்கம் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியின் அசல் தன்மையை மறைக்கிறது. இது நான் முன்பு வேலை செய்து மகிழ்ந்த அதே குக் வித் கோமாளி நிகழ்ச்சி அல்ல. எனவே, நான் இனி அதன் பகுதியாக தொடரமாட்டேன் " எனக் குறிப்பிட்டார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.