சோகமயமான குக்கு வித் கோமாளி செட் - என்ன நடந்தது?
குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து செப் தாமு வெளியே சென்று உள்ளதாக கூறப்படுகிறது .

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பிரபலமானது , ' குக்கு வித் கோமாளி ' . இந்த நிகழ்ச்சியில் புகழ் , சிவாங்கி , மணிமேகலை , பாலா , சுனிதா உள்ளிட்டோர் கோமாளியாக வந்து கலக்கி வருகின்றனர்.
சமையல் செய்யும் இடத்தில் கோமாளி எதற்கு என்று நிகழ்ச்சி தொடங்கிய நேரத்தில் அனைவரின் மனதிலும் கேள்வி எழுந்தது. ஆனால் காலப் போக்கில் தான் தெரிந்தது , கோமாளி இல்லாமல் அந்த நிகழ்ச்சியே இல்லை என்று. இடையிடையே சமையலும் பல நேரங்களும் அட்டகாசமும் , அலப்பறையும் நிறைந்தது தான் இந்த நிகழ்ச்சி .
’ குக் வித் கோமாளி ‘ முதல் சீசன் வெற்றி அடைந்த நிலையில் இரண்டாவது சீசனுக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். அந்த இரண்டு சீசன்களில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டது. ஒரு கட்டத்தில் இந்த நிகழ்ச்சி தான் அனைவரின் ஸ்டிரஸ் பஸ்டராக மாறி இருக்கிறது .