என்னாச்சு பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவிற்கு - அதிர்ச்சியில் ரசிகர்கள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  என்னாச்சு பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவிற்கு - அதிர்ச்சியில் ரசிகர்கள்

என்னாச்சு பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவிற்கு - அதிர்ச்சியில் ரசிகர்கள்

Aarthi V HT Tamil Published Jul 01, 2022 02:05 PM IST
Aarthi V HT Tamil
Published Jul 01, 2022 02:05 PM IST

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவிற்கு அறுவை சிகிச்சை முடிந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

<p>பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா</p>
<p>பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா</p>

நடிகை ஹேமாவுக்கு திடீரென்று அறுவை சிகிச்சை நடைபெறுவதாக செய்திகள் பரவியது. இந்த செய்து உண்மையா பொய்யா என்று ரசிகர்கள் குழம்பத்தில் இருந்தனர். 

இது குறித்து அவரே யூ-டியூப் சேனல் பக்கத்தில் வெளிப்படையாக கூறினார். 

அதில், “எனக்கு வலது பக்க மார்பகத்தில் கட்டி இருந்துள்ளது/ அதனை கண்டு ஆரம்பத்தில் எனக்கு புற்றுநோய் வந்துவிட்டதோ என நினைத்து தான் பயந்தேன். ஒவ்வொரு தடவை பயாப்ஸி முடிந்து வீட்டுக்கு வரும்போது பயந்தேன். 

பின்னர் ஒருவழியாக முடிவு செய்து அந்த கட்டியை அகற்றிக்கொள்ள முடிவு செய்தேன். அறுவை சிகிச்சைக்கு முன்னர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

அதற்கு பிறகு நான் என்னை அறுவை சிகிச்சை செய்ய அனுமதித்தனர். கிட்டத் தட்ட 6 மாத காலங்களாக அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டு செய்யமுடியாமல் போய்விட்டது. தற்போது இந்த சிகிச்சையை உடனடியாக செய்துகொள்ள வேண்டும். 

அந்த கட்டி கிட்டத்தட்ட 4 செமீ அளவு இருந்தது. எனக்கு குழந்தை பிறக்கும் போது செய்த அறுவை சிகிச்சைக்கு பிறகு, இரண்டாவது முறையாக இப்போது அறுவை சிகிச்சை செய்து கொள்கிறேன். மேலும் நான் தற்போது நலமாக இருக்கிறேன். வீடு திரும்பிவிட்டேன். இது சிறிய அளவிலான சிகிச்சை தான்” எனக் கூறியுள்ளார்.