தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  வில்லிகளின் சதியால் உயிரிழக்கும் பொம்மி.. எதிர்பாராத திருப்பங்களுடன் நினைத்தாலே இனிக்கும் சீரியல்

வில்லிகளின் சதியால் உயிரிழக்கும் பொம்மி.. எதிர்பாராத திருப்பங்களுடன் நினைத்தாலே இனிக்கும் சீரியல்

Pandeeswari Gurusamy HT Tamil
May 09, 2023 12:23 PM IST

பூஜைக்காக பொம்மி குளத்தில் தண்ணீர் எடுக்க போக அப்போது அளவை தண்ணீரில் முக்கி கொல்ல முயற்சி செய்ய அதிலிருந்து பொம்மி தப்பிக்கிறாள்.

நினைத்தாலே இனிக்கும்
நினைத்தாலே இனிக்கும்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீரியலில் கடந்த வாரம் பொம்மியின் உயிருக்கு ஆபத்து என்ற விஷயம் சித்தார்த்துக்கு தெரிய வந்த நிலையில் அதன் பிறகு இது பொம்மிக்கும் தெரிய வர அதை வெளியே காட்டி கொள்ளாமல் சித்தார்த்துடன் சந்தோஷமாக வாழ ஆசைப்பட்டு தனது வாழ்க்கையை தொடங்கினார். இந் நிலையில் இந்த வாரம் இந்த சீரியலில் நடக்க போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

அதாவது, சித்தார்த் நம்பூதிரி ஒருவரை சந்திக்கிறான். அவர் கோவிலில் வைத்து யாகம் ஒன்றை நடத்த வேண்டும் என சொல்ல சித்து அதற்கான வேலைகளில் இறங்குகிறான்.

அடுத்து சித்தார்த்த குடும்பத்தினர் எல்லாரும் கோவிலில் வந்து இறங்கி அனைவரும் காத்திருக்க நம்பூதிரி வந்து இறங்க யாகம் வேலைகள் தொடங்குகிறது.

இந்த பூஜைக்காக பொம்மி குளத்தில் தண்ணீர் எடுக்க போக அப்போது அளவை தண்ணீரில் முக்கி கொல்ல முயற்சி செய்ய அதிலிருந்து பொம்மி தப்பிக்கிறாள்.

அதன் பிறகு பாம்பு ஒன்று அவளை கடிக்க வர அதிலிருந்தும் பொம்மி தப்பித்து விடுகிறாள். பிறகு குழந்தை ஒன்று விளையாடி கொண்டிருக்க ஜீப் ஒன்று மோத வர பொம்மி குழந்தையை காப்பாற்ற ஓட அவளது உயிருக்கு ஆபத்து வருமோ என காட்சிகள் பரபரப்பாக கடைசியில் அதில் இருந்தும் தப்பிக்கிறாள்.

இப்படி பல தடங்கல் வந்து போகும் நிலையில் நம்பூதிரி இரவு 12 மணி வரை யாரும் எல்லையை விட்டு வெளியே போக கூடாது என கண்டிப்பாக சொல்ல இந்த யாக பூஜையில் பல தடங்கல் உருவாகிறது. 

சித்தார்த் பொம்மியிடம் எந்த விசயத்தையும் சொல்லாமல் கோவில் பூஜை போல காட்டி கொள்ள குளத்தில் இருந்து தண்ணீர் எடுக்க போன பொம்மி எதோ ஒரு பெண்ணின் சத்தம் கேட்டு எல்லையை தாண்டி வெளியே செல்ல கோவிலில் விளக்கு அலைய தொடங்க பொம்மியும் அம்மா பயந்து நடுங்குகிறாள்.

இதனால் சித்தார்த் பொம்மியை தேடி அலைய மறுபக்கம் எல்லையை தாண்டிய பொம்மியை நேத்ரா கடத்தி செல்கிறாள். வில்லிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து பொம்மியை கொடூரமாக கொன்று விடுகின்றனர்.

இதற்கிடையில் நடந்த போராட்டங்கள் என்ன? இனி சித்தார்த் வாழ்க்கையில் நடக்கப்போவது என்ன என்ற பரபரப்பான திருப்பங்களுடன் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே நினைத்தாலே இனிக்கும் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்