தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Jawan: ஜவான் படத்தில் நயன்தாரா தோற்றம் லீக்

Jawan: ஜவான் படத்தில் நயன்தாரா தோற்றம் லீக்

Aarthi V HT Tamil
Jul 07, 2023 11:37 AM IST

ஜவான் படத்தின் நாயகி நயன்தாராவின் லுக் லீக்காகி உள்ளது.

நயன்தாராவின் லுக்
நயன்தாராவின் லுக்

ட்ரெண்டிங் செய்திகள்

இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். முதல்முறையாக ஷாருக்கானுடன் திரையைப் பகிரவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்த வரிசையில் இம்மாதம் முதல் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளை தொடங்க உள்ளனர். முதலில் படத்தின் டிரைலரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஆனால் ப்ரோமோஷன் தொடங்குவதற்கு முன்பே, 'ஜவான்' படத்தில் இருந்து நயன்தாராவின் தோற்றம் கசிந்து சமூக வலைதளங்களில் வைரலானது. 

இதில் நயன்தாரா தனது கவர்ச்சியுடன் அட்டகாசமாக இருக்கிறார். சமீபத்திய கசிந்த தோற்றத்தில், நயன்தாரா சிவப்பு சட்டை மற்றும் பிங்க் கலர் சூட் அணிந்திருந்தார்.  இந்த தோற்றத்தில், அவர் ஒரு கூட்டத்தில் அமர்ந்திருப்பது போல் தெரிகிறது. 

இந்த தோற்றம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது ஜவான் படத்தில் நயன்தாராவின் தோற்றம் தானா? இல்லையா என்பது குறித்து இன்னும் தெளிவாகா இல்லை. ஏற்கனவே தமிழ், தெலுங்கு மொழிகளில் ஸ்டார் ஹீரோயினாக அங்கீகாரம் பெற்ற நயன்தாரா, 'ஜவான்' படத்தின் மூலம் பாலிவுட்டில் நேரடி நாயகியாக அறிமுகமாகிறார்.

ஜவான் படத்தில் விஜய் சேதுபதி, சானியா மல்ஹோத்ரா, பிரியாமணி, சுனில் குரோவர் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பாலிவுட் ஸ்டார் ஹீரோயின் தீபிகா படுகோனே கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். தற்போது 'ஜவான்' ட்ரெய்லர் வெளியாகும் தேதி குறித்து சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

ஜவான் படத்தின் ட்ரெய்லர் ஜூலை 12 ஆம் தேதி வெளியாக இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. தமிழ், தெலுங்கு, இந்தி என ஒரே நேரத்தில்  வெளியாக உள்ளது. 'ஜவான்' படத்தின் ட்ரெய்லருக்காக ஷாருக்கான் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்