Samantha: நான் மறுபடியும் வந்துட்டேன்..பேண்டஸி ஆக்‌ஷன் சீரிஸ் படப்பிடிப்பு செட்டில் சமந்தா - முழு தகவல்-samantha bact to sets for fantast action netflix series rakt brahmand by posting pics in instagram - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Samantha: நான் மறுபடியும் வந்துட்டேன்..பேண்டஸி ஆக்‌ஷன் சீரிஸ் படப்பிடிப்பு செட்டில் சமந்தா - முழு தகவல்

Samantha: நான் மறுபடியும் வந்துட்டேன்..பேண்டஸி ஆக்‌ஷன் சீரிஸ் படப்பிடிப்பு செட்டில் சமந்தா - முழு தகவல்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 20, 2024 10:08 AM IST

Samantha: நான் மறுபடியும் வந்துட்டேன் என்பதை ரசிகர்களுக்கு தெரிவிக்கும் விதமாக பேண்டஸி ஆக்‌ஷன் சீரிஸ் படப்பிடிப்பு செட்டில் இருந்து மீண்டும் ஷுட்டிங்கில் பங்கேற்றிருப்பாதக சமந்தா தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டா பதிவில் கனவு காண்பாதை நிறுத்த வேண்டாம் என எமோஷனாகவும் பதிவிட்டுள்ளார்.

Samantha: நான் மறுபடியும் வந்துட்டேன்..பேண்டஸி ஆக்‌ஷன் சீரிஸ் படப்பிடிப்பு செட்டில் சமந்தா - முழு தகவல்
Samantha: நான் மறுபடியும் வந்துட்டேன்..பேண்டஸி ஆக்‌ஷன் சீரிஸ் படப்பிடிப்பு செட்டில் சமந்தா - முழு தகவல்

மயோசிடிஸ் என்ற அரியவகை நோய் பாதிப்பு காரணமாக சினிமாவுக்கு குட்டி பிரேக் எடுத்திருந்தார் சமந்தா. இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் மீண்டும் நடிக்க இருப்பதாக தெரிவித்தார்.

ஆனால் அதன் பிறகு அவர் எந்த படத்தில் நடிக்கிறார் என்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாமல் இருந்து வந்தது. இதையடுத்து தனது பிறந்தநாளான ஏப்ரல் 28 அன்று தான் நடிக்கும் புதிய படம் குறித்து ஃபஸ்ட் லுக் போஸ்டருடன் பகிர்ந்தார் சமந்தா. அதன்படி மா இண்டி பங்காரம் என்ற தெலுங்கு படத்தில் அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

புதிய வெப்சீரிஸ் ஷுட்டிங்

தற்போது தி பேமிலி மேன், கன்ஸ் ஆஃப் குலாப் போன்ற வெப்சீரிஸ்களை உருவாக்கிய ராஜ் மற்றும் டிகே திரைக்கதை உருவாக்கத்தில், பாலிவுட் இயக்குநர் ராஹி அனில் பார்வே இயக்கும் ரத் பிரமந்த் (ரத்த பிரபஞ்சம்) என்ற வெப்சீரிஸில் படப்பிடிப்பில் நடிகை சமந்தா பங்கேற்க தொடங்கியுள்ளார்.

இதன் ஷுட்டிங்கில் பங்கேற்றிருக்கும் அவர், அதுபற்றி தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து எமோஷனாகவும் தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், "கனவு காண்பதை நிறுத்த வேண்டாம். சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒரு படத்தின் படப்பிடிப்புக்கு வந்ததில் மகிழ்ச்சி" என குறிப்பிட்டுள்ளார்.

சமந்தாவின் இந்த பதிவுக்கு பாலிவுட் இளம் நடிகையான திஷா பதானி, All the best என குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பேண்டஸி வெப் சீரிஸ்

சமந்தா நடிக்கும் ரத் பிரமந்த் என்கிற இந்த புதிய வெப்சீரிஸ் பேண்டஸி ஆக்‌ஷன் பாணியில் உருவாகிறது. பாலிவுட் நடிகர் ஆதித்யா ராய் கபூர் கதையின் நாயகனாக நடிக்கிறார். ரத்த சரித்திரம் மிக்க ராஜ்ஜியத்தின் கதையாக உருவாக இருக்கும் இந்த சீரிஸில் வாமிகா கப்பி, அலி ஃபாசல் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

சிட்டாடல்: ஹனி பன்னி வெப்சீரிஸ்க்கு பிறகு சமந்தா நேரடியாக நடிக்கும் இந்தி வெப்சீரிஸ் ஆக இது உருவாகிறது. சமந்தா ஹீரோயினாக நடிக்கும் இந்த சீரிஸ் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்படும் என தெரிகிறது.

இந்த வெப்சீரிஸ் குறித்து சமீபத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் பிரபல ஸ்டீரிமிங் தளமான நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது.

சிட்டாடல் ரிலீஸ்

பாலிவுட் நடிகர் வருண் தவான் ஜோடியாக சமந்தா நடித்திருக்கும் சிட்டாடல்: ஹனி பன்னி வெப்சீரிஸ் வரும் நவம்பர் 7ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதன் டீசர் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்ட நிலையில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதுடன் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.

இந்த சீரிஸில் சமந்தா ஆக்‌ஷன், ரெமாண்ஸ் என அனைத்திலும் பட்டையை கிளப்பியுள்ளார். கடைசியாக சமந்தா நடிப்பில் கடந்த ஆண்டில் குஷி என்ற ரொமாண்டிக் படம் வெளியானது. இதன் பின்னர் தற்போது சிட்டாடல் வெளியீட்டை காண அவரது ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

டேட்டிங் வதந்தி

தி பேமிலி மேன் வெப் சீரிஸ் இயக்குநர்களின் ஒருவரான ராஜ் நிடிமோருவுடன், சமந்தா டேட்டிங்கில் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இது ரசிகர்கள் மத்தியில் ஒரு புறம் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், பலரும் சமந்தாவுக்கு இந்த புதிய காதல் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் எனவும் கருத்துகளை பகிர்ந்தனர்.

இந்த டேட்டிங் வதந்தி குறித்தும் வாய் திறக்காமலேயே மெளனம் காத்து வந்த சமந்தா, இது தொடர்பாக ஜாடை மாடையாக தனது இன்ஸ்டா பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அழகான கூலர்ஸ் அணிந்து எந்த கேப்ஷனும் இல்லாமல், கேஷுவலாக காரில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார் சமந்தா. இதில் அவர் அணிந்திருக்கும் டி ஷர்டில் "சமாதானம் மற்றும் அமைதிக்கான அருங்காட்சியகம்" என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

அதேபோல், தனது கைவிரலை வைத்து போட்டோவுக்கு அவர் போஸ் கொடுத்திருக்கும் விதம் ஹேட்டர்களுக்கு மறைமுகமாக பதில் சொல்லும் விதமாகவும் அமைந்திருந்தது.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.