Samantha: படப்பிடிப்பில் காயம்..ஊசியை வைத்து சிகிச்சை - இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்த சமந்தா - என்ன நடந்தது?-samantha injured in shooting and shares needle treatment image in her insta story - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Samantha: படப்பிடிப்பில் காயம்..ஊசியை வைத்து சிகிச்சை - இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்த சமந்தா - என்ன நடந்தது?

Samantha: படப்பிடிப்பில் காயம்..ஊசியை வைத்து சிகிச்சை - இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்த சமந்தா - என்ன நடந்தது?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 05, 2024 03:00 PM IST

Samantha Injured in Shooting: படப்பிடிப்பில் காயம் அடைந்த நடிகை சமந்தா, ஊசியை வைத்து சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்திருந்தார்.

Samantha: படப்பிடிப்பில் காயம்.. ஊசியை வைத்து சிகிச்சை - இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்த சமந்தா - என்ன நடந்தது?
Samantha: படப்பிடிப்பில் காயம்.. ஊசியை வைத்து சிகிச்சை - இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்த சமந்தா - என்ன நடந்தது?

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தனது பிறந்தநாளின்போது இந்த படம் குறித்து அறிவித்தார் சமந்தா. கையில் துப்பாக்கி ஏந்தியவாறு சிவப்பு சேலை அணிந்து, கோபமான லுக்கில் சமந்தா பார்ப்பது போல் பங்காரம் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

கதையின் நாயகியாக அவர் நடித்து வரும் இந்த படத்தில் அதிரடியான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம். இந்த படத்தின் மூலம் சமந்தா தயாரிப்பாளாராகவும் அவதாரம் எடுத்துள்ளார். அடுத்த ஆண்டில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படப்பிடிப்பில் காயம்

இதையடுத்து பங்காரம் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வரும் சமந்தா ஆக்‌ஷன் காட்சியில் நடித்தபோது காயமடைந்துள்ளார். இதைத்தொடர்ந்து தனது காயத்துக்கு அவர் நீடில் (ஊசி) சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.

தனது காயம் குறித்து இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்த சமந்தா, "காயம் இல்லாமல் நான் ஆக்‌ஷன் ஸ்டாராக மாற முடியுமா" என்ற கேப்ஷனை குறிப்பிட்டுள்ளார்.

கையில் நீடில் சிகிச்சை மேற்கொள்ளும் சமந்தா
கையில் நீடில் சிகிச்சை மேற்கொள்ளும் சமந்தா

சமந்தாவின் இந்த பதிவை தொடர்ந்து அவரது ரசிகர்களும், நலம் விரும்பிகளும் ஆரோக்கியத்தில், உடல் நலத்தில் கவனம் செலுத்துமாறு கருத்துகளை பகிர்ந்துள்ளனர். இதற்கிடையே சமந்தா விரைவில் குணமடைந்து படப்பிடிப்புக்கு திரும்பவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சிட்டாடல்

பங்காரம் படத்துக்கு முன்னர் சமந்தா நடித்து முடித்திருக்கும் சிட்டாடல்: ஹனி பன்னி என்ற வெப்சீரிஸ் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நவம்பர் 7ஆம் தேதி ஸ்டிரீம் ஆக இருக்கிறது. இந்த சீரிஸின் டீசர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஹாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா - ரிச்சர்டு மேடன் நடிப்பில் வெளியான ஸ்பை திரில்லர் சீரிஸான சிட்டாடல் இந்திய பதிப்பாக சிட்டாடல்: ஹனி பன்னி உருவாகியுள்ளது. தி பேமிலி மேன் வெப்சீரிஸை இயக்கிய ராஜ் - டிகே, சமந்தா நடித்திருக்கும் சிட்டாடல்: ஹனி பன்னி சீரிஸை இயக்கியுள்ளனர்.

இதில் சமந்தாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகர் வருண் தவான் நடித்துள்ளார். கேகே மேனன், சிம்ரன், சிகந்தர் கெர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்தியில் வெளியாகும் இந்த சீரிஸ் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகும் என தெரிகிறது.

சிட்டாடல்: ஹனி பன்னி சமந்தாவுக்கு பாலிவுட் என்ட்ரியாக அமைந்துள்ளது. மயோசிடிஸ் என்ற அரிய வகை நோய் பாதிப்பு காரணமாக நடிப்பிலிருந்து சுமார் வருடம் காலம் வரை விலகியிருந்த சமந்தாவின் மார்க்கெட் சிட்டாடல்: ஹனி பன்னி ரிலீஸுக்கு பின் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமந்தா நடிப்பில் இருந்து பிரேக் எடுத்துகொண்ட காலகட்டத்தில் சகுந்தலம், குஷி என இரண்டு படங்கள் வெளியானது. இவை இரண்டும் விமர்சக ரீதியாக பாராட்டை பெற்றாலும் பாகஸ் ஆபிஸில் பெரிய வசூலை பெறவில்லை.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.