Samantha: சமந்தாவைப் பார்த்தால்... வாயைத் திறந்த நாக சைதன்யா காதலி... வைரலாகும் செய்தி-actress shobitha tulibalaopens up her statement about samantha - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Samantha: சமந்தாவைப் பார்த்தால்... வாயைத் திறந்த நாக சைதன்யா காதலி... வைரலாகும் செய்தி

Samantha: சமந்தாவைப் பார்த்தால்... வாயைத் திறந்த நாக சைதன்யா காதலி... வைரலாகும் செய்தி

Malavica Natarajan HT Tamil
Sep 26, 2024 12:11 PM IST

Samantha: நடிகை சமந்தாவின் பட அறிவிப்புகளை காணும் போது அவர் சூப்பர் கூலாக உள்ளதாகத் தெரிகிறது என சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவின் காதலி சோபிதா துலிபாலா கூறியுள்ளார்.

Samantha: சமந்தாவைப் பார்த்தால்... வாயைத் திறந்த நாக சைதன்யா காதலி... வைரலாகும் செய்தி
Samantha: சமந்தாவைப் பார்த்தால்... வாயைத் திறந்த நாக சைதன்யா காதலி... வைரலாகும் செய்தி

சினிமா எண்ட்ரி

தமிழ் ரசிகர்ளின் மனங்களில் காதல் திரைப்படம் என்றால் இதுதான் என முத்திரை குத்திய படங்களில் ஒன்று தான் கௌதம் வாசுதேவ் மேனனின் விண்ணைத் தாண்டி வருவாயா. இந்தப் படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்து சினிமாவில் எண்ட்ரி கொடுத்தவர் சமந்தா. பின் இதே படத்தின் தெலுங்கு வெர்ஷனில் திரிஷாவிற்கு பதிலாக கதாநாயகியாக அறிமுகமானார் சமந்தா. இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் நாக சைதன்யா.

திருமணம்- விவாகரத்து

இந்தப் படத்தின் மூலம் அறிமுகமான இருவரும் காதல் வலையில் விழுந்தனர். பின் இருவரும் அவர்கள் கெரியரை பார்த்துக் கொண்டே காதலர்களாக வலம் வந்தனர். இதற்கிடையில், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சமந்தா முன்னணி நடிகையாக வலம் வரத் தொடங்கியிருந்தார்.

பின் சமந்தாவும்- நாக சைதன்யாவும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னும் இருவரும் சினிமாவில் நடித்து வரத் தொடங்கிய நிலையில், சமந்தா ரசிகர்கள் கொண்டாடும் மாபெரும் நடிகையாக உருவெடுத்தார். 

அந்த சமயத்தில் நாக சைதன்யாவிற்கும் சமந்தாவிற்கும் இடையே நாளுக்கு நாள் கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்தது. இந்தத் தகவல்கள் மீடியாவில் கசியத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து இருவரும் திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக கூட்டாக அறிவித்தனர். இது அவர்களது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இவர்களின் பிரிவுக்கு பல காரணங்கள் கூறப்பட்டு வந்த நிலையில், சமந்தா மீண்டும் கெரியரில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

டாப் கியரில் கெரியர்

ஆனால், சில நாட்களிலேயே அவர் மையோசிடிஸ் எனும் அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டார். காதல் கணவரின் பிரிவும் நோயும் ஒருசேர சமந்தாவை தாக்கிய நிலையில், தமிழ், தெலுங்கு திரையுலக ரசிகர்கள் பலரும் சமந்தாவிற்காக சோகத்தில் மூழ்கினர்.

பின், சிகிச்சைக்காக சினிமாவிலிருந்து சில காலம் ஓய்வெடுத்து வந்தார். பின், சிகிச்சை முடிந்து நடிப்பைத் தொடங்கிய சமந்தா தற்போது டாப் கியரில் பறந்து வருகிறார். இவர் தற்போது திரைப்படங்களைத் தொடர்ந்து வெப் சீரிஸ்களிலும் முக்கியமாக கவனம் செலுத்தி வருகிறார். தனது அடுத்தடுத்த சினிமா பயணங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கி வருகிறார்.

சந்தோஷத்தை கண்டுபிடித்தோம்

மறுபுறம், சமந்தாவை விவாகரத்து செய்த பின் நாக சாதன்யா, பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சையமான சோபிதா துலிபாலாவை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் அவரை நிச்சயதார்த்தமும் செய்துள்ளார். இதனால், தனது மகனின் சந்தோஷம் என்ன என்பதை நாங்கள் கண்டுபிடித்து விட்டோம் எனவும் நாக சைதன்யாவின் தந்தையும் நடிகருமான நாகார்ஜூனா கூறியிருந்தார்.

சூப்பர் கூல் சமந்தா

இந்த சமயத்தில், நடிகையும் சைதன்யாவின் காதலியுமான சோபிதா துலிபாலா, சமந்தா குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில், சமந்தாவின் கெரியர் பற்றிய தனது கருத்தை அவர் தெரிவித்துள்ளார். சமந்தாவின் திரையுலக பயணத்தை பார்க்கும் போது அது சூப்பர் கூலாக இருக்கிறது. சமந்தாவின் படங்களை எடுத்துக் கொண்டால் அவர்தான் அந்தப் படங்களின் தலைப்பு செய்தியாக இருக்கிறார். அதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது எனக் கூறியுள்ளார்.

முன்னதாக நாக சைதன்யாவுடன் நிச்சயமான சமயத்தில், அடுத்த ஜென்மத்தில் நான் எனது தாய், தந்தைக்கு மீண்டும் மகளாகப் பிறக்க வேண்டும். எனது தங்கை நாயாக பிறந்தாலும் கவலை இல்லை எனக் கூறியிருந்தார். இது நடிகை சமந்தாவின் ரசிகர்களை கொதிப்படையச் செய்திருந்தது. ஏனெனில் சோபிதாவின் தங்கை பெயர் சமந்தா. இவர் தங்கையை தாக்குவது போல் மறைமுகமாக நடிகை சமந்தாவையே தாக்கியுள்ளார் எனக்கூறி சமந்தாவின் ரசிகர்கள் ஆவேசமடைந்தனர்.

Whats_app_banner
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.