தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Mrunal Thakur: திருமண வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்.. ஓபனாக சொல்லிய மிருணாள் தாகூர்

Mrunal Thakur: திருமண வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்.. ஓபனாக சொல்லிய மிருணாள் தாகூர்

Aarthi Balaji HT Tamil
Apr 26, 2024 12:14 PM IST

உறவுகள் மிகவும் கடினமானவை என்பதை நாங்கள் அறிவோம். சரியான துணையை கண்டுபிடிப்பது கடினம். ஆனாலும் நாம் சரியானதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றார் மிருணாள் தாகூர்.

மிருணாள் தாகூர்
மிருணாள் தாகூர் (Instagram/@mrunalthakur)

ட்ரெண்டிங் செய்திகள்

இவரது அழகு மற்றும் நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதனால் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. சீதா ராமம் படத்திற்குப் பிறகு 'ஹாய் நன்னா' படத்தின் மூலம் இன்னொரு வெற்றியைப் பெற்றார். சமீபத்தில் ஃபேமிலி ஸ்டார் படத்தில் நடித்த இவருக்கு இந்தியில் நல்ல வாய்ப்புகள் வருகின்றன.

தொடர் சலுகைகள், வெற்றி என பிஸியாக இருக்கும் மிருணாள் சமீபத்தில் ஒரு பாலிவுட் மீடியாவை சந்தித்தார். இந்த சந்தர்ப்பத்தில், அவர் தனது தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பகிர்ந்து கொண்டார். மேலும் திருமணத்திற்கு முன்பே குழந்தைகளுக்காக திட்டமிட்டு இருப்பதாகவும் அதிர்ச்சியான தகவலை கூறியுள்ளார்.

தற்போது, ​​மிருணாளின் கருத்துகள் இன்டஸ்ட்ரியில் ஹாட் டாபிக். முப்பதுகளில் இருக்கும் இவர் திருமணம், காதல் கேள்விகளை அடிக்கடி எதிர்கொள்கிறார். ஆனால் தனது உறவு நிலை தனிமையில் இருப்பதாகவும், தனக்கு ஆண் நண்பர் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியபோது, ​​அவர் தனது சமீபத்திய பேட்டியில் தனது வாழ்க்கை துணை மற்றும் குழந்தைகளைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் மிருணாள் தாகூர் அளித்த பேட்டியில், "தொழில் மற்றும் வாழ்க்கை இரண்டையும் சமநிலைப்படுத்துவது முக்கியம். ஆனால், இரண்டையும் எப்படி சமநிலைப்படுத்துவது என்று எல்லோரும் நினைக்கிறார்கள். உறவுகள் மிகவும் கடினமானவை என்பதை நாங்கள் அறிவோம். சரியான துணையை கண்டுபிடிப்பது கடினம். ஆனாலும் நாம் சரியானதைக் கண்டுபிடிக்க வேண்டும். எங்கள் தொழில் வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் நபராக இருக்க வேண்டும்.

ஷூட்டிங் முடிந்து வீட்டுக்கு போனால் ரொம்ப மோசம், வேலை நம்மை பாதிக்கும் அதான் தெரபிக்கு போறேன். எல்லாருக்கும் இது ரொம்ப அவசியம் தான். அதிலும் வித்தியாசமாக நடிக்கும் நடிகர்களுக்கு தெரபி ரொம்ப முக்கியம். அதனால் தான் இதை நான் வெளிப்படையாகச் சொல்கிறேன்.

இதற்கிடையில், தெலுங்கில் அடுத்தடுத்து வெற்றிகளைக் கண்ட மிருணாள், சமீபத்தில் ஃபேமிலி ஸ்டார் மூலம் தோல்வி அடைந்தார். இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஏப்ரல் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் தோல்வி பெற்றது. தற்போது மிருணாள் கையில் இந்தி படம் உள்ளது. பூஜா மேரி ஜான் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதன்பி றகு பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகும் படத்தில் மிருணாள் கதாநாயகியாக நடிக்கப் போவதாக ஒரு பேச்சு அடிபட்டது. இருப்பினும் இது உறுதியான தகவலாக இன்னும் வெளிவரவில்லை. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்