தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kovai Guna Death: மிமிக்கிரி கலைஞர் கோவை குணா திடீர் மரணம்!

Kovai Guna Death: மிமிக்கிரி கலைஞர் கோவை குணா திடீர் மரணம்!

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 21, 2023 07:42 PM IST

நாளை கோவை குணாவின் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவை குணா
கோவை குணா

ட்ரெண்டிங் செய்திகள்

கோவை விளாங்குறிச்சி பகுதியில் வசித்து வந்தவர் கோவை குணா. இவர் திருவிழாக்கள் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல குரலில் பேசி கோவை மக்களிடையே பிரபலமானார்.  குறிப்பாக ரஜினி,சிவாஜி குரலில் மேடைகளில் இவர் மேடையில் பேசும்போது ரசிகர்கள் பெரிதும் விரும்பினர். இதனை தொடர்ந்து அவருக்கு நகைச்சுவைகள் மற்றும் மிமிக்கிரி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து குணா தமிழகம் முழுவதும் பலரது மனதில் இடம் பிடித்தார். பின்னர் அவருக்கு சென்னை காதல் உள்ளிட்ட சில படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக 80 மற்றும் 90 கிட்ஸ்களுக்கு மத்தியில் கோவை குணா மிகவும் பிரபலமானார்

பின்னர் தமிழ்நாடு பல குரல் கலைஞர்கள் என்ற சங்கத்தில் இணைந்தார். தொடர்ந்து பல்வேறு தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அவரது திறமைகளை வெளிப்படுத்தி வந்தார். இந்நிலையில் கடந்த ஓராண்டாக சிறுநீரக பிரச்சனையால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து  டாயாலிஸ் செய்து வந்த அவர் சில தினங்களுக்கு முன் உடல்நலக்குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மதியம் எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். தற்போது அவரது உடல் கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கோவையில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது நாளை அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவை குணாவின் இறப்பிற்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் நகைச்சுவை நடிகர்கள் பல குரல் கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்