Marimuthu Son: ஜோதிடம் சாபத்தால் மாரிமுத்து இறந்தாரா? - ஓபனாக பேசிய மகன்
நடிகர் மாரிமுத்துவின் மகன் தனது தந்தையின் மரணத்திற்கு ஜோதிடர்கள் காரணமில்லை என கூறி உள்ளார்.

மாரிமுத்து மகன்
தேனி மாவட்டம் வருஷநாடு அருகே உள்ள பசுமலைத்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (57). எதிர்நீச்சல் தொடர் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார். மாரிமுத்து மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த நிலையில் அவரின் உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.
முன்னதாக தமிழா தமிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாரிமுத்து பேசுகையில், "இந்தியா இப்படி ஒரு குழப்பம் அடைந்ததற்கு காரணம் ஜோதிடர்களும், ஜோதிடத்தை நம்புபவர்களும் தான்" என்றார். இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோல அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜோதிடர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் பின்னர் நிகழ்ச்சியில், உணர்வுபூர்வமாக அவ்வாறு செய்ததற்காக மாரிமுத்து மன்னிப்பு கேட்டார்.
