தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Mari Selvaraj: உங்க கண் பிடிக்கும்.. வித்தியாசமாக ஃபகத் ஃபாசிலுக்கு வாழ்த்து சொல்லிய மாரி

Mari Selvaraj: உங்க கண் பிடிக்கும்.. வித்தியாசமாக ஃபகத் ஃபாசிலுக்கு வாழ்த்து சொல்லிய மாரி

Aarthi V HT Tamil
Aug 08, 2023 11:26 AM IST

நடிகர் ஃபகத் ஃபாசில் பிறந்தநாளை முன்னிட்டு, இயக்குநர் மாரி செல்வராஜ்

ஃபகத் ஃபாசில், மாரி செல்வராஜ்
ஃபகத் ஃபாசில், மாரி செல்வராஜ்

ட்ரெண்டிங் செய்திகள்

இவர் சமீபத்தில் நடித்த படம் தான், மாமன்னன். ரத்தினவேல் என்ற பாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். திரையில் வெளியாகி பல்வேறு விமர்சனங்களை பெற்ற நிலையில் ஓடிடியில் வெளியான பின்னர், ரத்னவேலு கதாபாத்திரம் வைரலாக துவங்கிவிட்டது.

இந்நிலையில் நடிகர் ஃபகத் ஃபாசில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்து சொல்லி வருகிறார்கள். அந்த வகையில் இயக்குநர் மாரி செல்வராஜ், தன் பட நடிகர் ஃபகத் ஃபாசிலுக்கு வாழ்த்து சொல்லி உள்ளார்.

அந்த வகையில் மாரி செல்வராஜ் வெளியிட்டு இருக்கும் பதிவில், “வணக்கம் பகத் சார்!!!

உங்கள் இரண்டு கண்களும் எனக்கு அவ்வளவு பிடிக்கும். அந்த இரண்டு கண்களை வைத்து தான் என் ரத்தினவேல் கதாபாத்திரத்தை உருவாக்கினேன். 

ஒரு கண்ணில் பல தலைமுறைகளாக சொல்லிக்கொடுக்கப்பட்ட வாழ்க்கைமுறை சரி என்ற நம்பிக்கையை தீர்க்கமாக வையுங்கள் என்றேன். மற்றொரு கண்ணில் புதிய தலைமுறைகள் முளைத்து வந்து கேட்கும் வாழ்வியல் முரணுக்கான ஆக்ரோஷ கேள்விகளையும் குழப்பங்களையும் வையுங்கள் என்றேன்.

மிகச்சரியாக இரண்டு கண்களிலும் இரண்டு நேரெதிர் வாழ்வை வைத்து என் படம் முழுக்க அப்படியே பயணித்தீர்கள். இறுதியாக இரண்டு கண்களையும் மூட சொன்னேன். ஏனென்று கேட்காமல் மூடினீர்கள். உங்கள் நெஞ்சுக்கூட்டுக்குள் டாக்டர். அம்பேத்கரின் குரலை ஓங்கி ஒலிக்க விட்டேன். அவ்வளவு தான் உடல் சிலிர்த்து நீங்கள் ஓடிவந்து என்னை அணைத்துக்கொண்ட அந்த நொடி தீரா பரவசத்தோடு சொல்கிறேன்,  இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பகத்” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்