தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Mari Selvaraj On Thevar Magan: 15 வருஷம் கஷ்டப்பட்டிருக்கேன்; கமல் சார் பெரிய லெஜண்ட்ன்னு எங்களுக்குத் தெரியாதா? - மாரி

Mari Selvaraj on Thevar Magan: 15 வருஷம் கஷ்டப்பட்டிருக்கேன்; கமல் சார் பெரிய லெஜண்ட்ன்னு எங்களுக்குத் தெரியாதா? - மாரி

Kalyani Pandiyan S HT Tamil
Jun 24, 2023 11:49 AM IST

வேறு ஒரு பிரச்சினை என்றால் ஈஸியாக பேசிவிட முடியும். ஆனால் இந்த குறிப்பிட்ட பிரச்சினை என்பதால்தான் பேச முடியவில்லை. இதே வேறு ஒரு சினிமாட்டிக்கான பிரச்சினை என்றால் இது இவ்வளவு பெரிய சர்ச்சையாக மாறியிருக்காது.

Mari Selvaraj address his controversial letter and speech against Kamal Haasan and Thevar Magan
Mari Selvaraj address his controversial letter and speech against Kamal Haasan and Thevar Magan

ட்ரெண்டிங் செய்திகள்

இவரது பேச்சு பரபரப்பை உண்டாக்கியது. இதற்கு கமல் பேசும் போது எதிர்வினை ஆற்றுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் அவர் அது குறித்து எதுவும் பேசவில்லை. மாறாக இந்தப்படத்தை அனைவரும் அவசியம் பார்க்க வேண்டும் என்று சொல்லி சென்று விட்டார். இந்த விவகாரம் தற்போது சமூகவலைதளாங்களில் பேசு பொருளாக மாறி சர்ச்சைக்கு வித்திட்டு இருக்கிறது. இதற்கு மாரிசெல்வராஜ் பல்வேறு பேட்டிகளில் விளக்கம் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் அண்மையில் கலாட்டா ப்ளஸ் யூடியூப் சேனலுக்கு இது குறித்து பேசியதாவது, “ நான் நினைத்தை பேசும் இடத்திற்கு வந்து விட்டதாக சோசியல் மீடியாவில் பேசப்படுகிறது. ஆனால் நான் இன்னும் அந்த இடத்திற்கு வரவில்லை. எனக்கும் கமல் சாருக்கும் இடையே நடந்த உரையாடல் என்னுடைய எமோஷன். ஆனால் அது உள்வாங்கிப்பட்டிருக்க கூடிய விதம் வேறு மாதிரியாக இருக்கிறது.

வேறு ஒரு பிரச்சினை என்றால் ஈஸியாக பேசிவிட முடியும். ஆனால் இந்த குறிப்பிட்ட பிரச்சினை என்பதால்தான் பேச முடியவில்லை. இதே வேறு ஒரு சினிமாட்டிக்கான பிரச்சினை என்றால் இது இவ்வளவு பெரிய சர்ச்சையாக மாறியிருக்காது. அவர் மூத்த ஒரு சினிமா கலைஞர், சினிமாவின் அடையாளம் என்ற உரிமையோடு நான் பேசியது என்பது மிகவும் எமோஷனலனா தருணம். இது என்னுடைய வாழ்க்கையின் சாதனை.

அதனை அவர் ஏற்றுக்கொள்வதும் அதற்கு அவர் பதில் கொடுப்பதும் அது பெரிய விஷயம். ஆனால் இத்தனை வருடம் ஆன பிறகும் கூட, நான் இரண்டு படங்கள் எடுத்தப்பிறகும் கூட, கமல்சார் படத்தை பார்த்து எனக்கு ஆதரவாக பேசிய போதும் கூட வெளியில் இப்படியான பேச்சுக்கள் எழுவது எனக்கு மிகவும் எமோஷனால இருக்கிறது.

சினிமாவில் 15 வருடம் கஷ்டப்பட்ட எனக்கு கமல்சார் யாரென்று தெரியாதா? கமல்சார் எவ்வளவு பெரிய லெஜண்ட் என்று தெரியாதா? ஆனால் என்னுடைய எமோஷன் உண்மைதானே. 14 வருடத்திற்கு முன்னால் நான் பட்ட ஏக்கத்தை இப்போது மாற்ற முடியாதல்லவா? தேவர்மகன் குறித்து நான் எழுதிய கடிதம் சினிமாவிற்குள் நான் வருவேனா? என்று தெரியாத போது எழுதியது. அவர் சினிமாவுக்கான டீச்சர். நான் பேசியதற்கு அவர் கவலைப்படாதே என்று சொல்வது போலத்தான் கமல் சாரின் பேச்சு அன்று இருந்தது.” என்றார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்