தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Maaveeran Ott Release: வீரன் வருகிறான்.. மாவீரன் ஓடிடி ரிலீஸ் தேதி தெரியுமா?

Maaveeran OTT release: வீரன் வருகிறான்.. மாவீரன் ஓடிடி ரிலீஸ் தேதி தெரியுமா?

Aarthi V HT Tamil
Aug 07, 2023 01:10 PM IST

மாவீரன் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

மாவீரன்
மாவீரன்

ட்ரெண்டிங் செய்திகள்

இதனையடுத்துதான் அவரது நடிப்பில் கடந்த ஜூலை 14ம் தேதி ‘மாவீரன்’ திரைப்படம் வெளியானது. 'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இப்படத்தை இயக்கி இருந்தார். இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்திருந்தார்.

இவர்களுடன் சரிதா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப்படத்தில் வில்லனாக பிரபல இயக்குநர் மிஷ்கின் நடித்திருந்தார். இந்தப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக நடிப்பில் சிவகார்த்திகேயனின் மேற்கொண்டிருந்த புதிய முயற்சியும், படத்தில் இடம் பெற்ற யோகிபாபுவின் காமெடியும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்று வருகிறது.

40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்ட மாவீரன் வணிக ரீதியாக வெற்றியடைந்தது. இந்தப்படம் தற்போது வரை 75 கோடி வசூல் செய்திருப்பதாக அந்தப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் அறிவித்து இருந்தது. 

இந்நிலையில், 'மாவீரன்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் வருகிற 11 ஆம் தேதி அமேசான் ஃபிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்து உள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்