தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Maaveeran: ரஜினிக்காக இப்படி ஒரு காரியத்தை செய்த சிவகார்த்திகேயன்

Maaveeran: ரஜினிக்காக இப்படி ஒரு காரியத்தை செய்த சிவகார்த்திகேயன்

Aarthi V HT Tamil
May 06, 2023 11:57 AM IST

சிவகார்த்திகேயன் நடித்து இருக்கும் மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

மாவீரன்
மாவீரன்

ட்ரெண்டிங் செய்திகள்

மண்டேலா படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார். இந்தப்படத்தில் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் படம் உருவாகிறது. மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குநர் மிஷ்கின் நடிக்கிறார். இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைக்கிறார்.

படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்து உள்ளனர்.

படம் வருகிற ஆகஸ்ட் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிப்பு வெளியானது. ஆனால் தற்போது படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்படுகிறது. 

அதன் படி மாவீரன் படம் ஜுலை 14 ஆம் தேதி ரிலீஸாகும் என தகவல் உள்ளது.

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இத்துடன் தெலுங்கில் மெஹர் ரமேஷ் இயக்கத்தில் மெகாஸ்டார் சிரஞ்சீவி நடித்துள்ள ‘போலா ஷங்கர்’ படமும் வருகிறது. சந்தீப் ரெட்டி வாங்காவின் 'அனிமல்' சுதந்திர தின வாரத்தில் இந்திய சந்தையிலும் கவனம் செலுத்துகிறது. 

இதையெல்லாம் கருத்தில் கொண்டு பாக்ஸ் ஆபிஸ் பாதிக்கும் என்பதால் மாவீரன் படத்தை முன்கூட்டியே ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் நிலையில் உள்ளதால் ஜூலை 14 ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் ‘மாவீரன்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து உள்ளார். சுனில், மிஸ்கின், யோகி பாபு, சரிதா ஆகியோர் மற்ற வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், க்ளிம்ப்ஸ் மற்றும் பர்ஸ்ட் சிங்கிள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்த படத்திற்கு விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்ய, பரத் சங்கர் இசையமைக்கிறார். பிலோமினே ராஜ் படத்தொகுப்பாளராகவும், குமார் கங்கப்பன் கலை இயக்குநராகவும் பணிபுரிகின்றனர். இருமொழிகளில் உருவாகும் இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் பேனரில் அருண் விஷ்வா மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கிறார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்