தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Maamannan Trailer: ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மாமன்னன் படக்குழு

Maamannan Trailer: ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மாமன்னன் படக்குழு

Aarthi V HT Tamil
Jun 15, 2023 10:57 AM IST

மாமன்னன் படத்தின் ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மாமன்னன்
மாமன்னன்

ட்ரெண்டிங் செய்திகள்

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்த பரியேறும் பெருமாள் படத்தை இயக்கியதன் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் இயக்குநர் மாரி செல்வராஜ். தொடர்ந்து தனுஷூடன் இணைந்து கர்ணன் படத்தை இயக்கினார்.இந்த இரண்டு படங்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை 125 நாட்களுக்கு மேல் படமாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் படம் வெளியாக உள்ளது. இதில் வடிவேலுவின் கதாபாத்திரம் இதுவரை நாம் பார்த்திடாத வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. அதில் நடிகர் வடிவேலுவின் லுக் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் மாமன்னன் படத்தின் ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி நாளை ( ஜூன் 15 ) பட ட்ரெய்லர் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்பு மாமன்னன் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மாமன்னன் படத்தின் முதல் சிங்கிள் பாடலான, ‘ராசா கண்ணு’ பாடல் கடந்த 19 ஆம் தேதி வெளியானது. யுகபாரதி வரிகளில் வடிவேலு பாடியிருந்த இந்தப் பாடலை பாடி இருந்தார். அதே போல் நேற்று ‘கொடி பறக்குற காலம் வந்தாச்சு’ பாடல் வெளியாகி இருந்தது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்