தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Lok Sabha Election 2024 : காலையிலேயே வாக்களித்த அஜித், ரஜினி, சிவகார்த்திகேயன், தனுஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள்!

Lok Sabha election 2024 : காலையிலேயே வாக்களித்த அஜித், ரஜினி, சிவகார்த்திகேயன், தனுஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள்!

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 19, 2024 08:49 AM IST

Lok Sabha election 2024 : இன்று காலையில் கால் மணி நேரத்திற்கு முன்பாகவே வாக்கு சாவடி மையத்திற்கு வந்த நடிகர் அஜித் முதல் ஆளாக தனது வாக்கை பதிவு செய்தார். மேலும் ரஜினி காந்த், சிவகார்த்திகேயன், ராதிகா, சரத்குமார், நடிகர் தனுஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் ஆர்வமாக தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

காலையிலேயே வாக்களித்த அஜித், ரஜினி, சிவகார்த்திகேயன், தனுஷ்  உள்ளிட்ட திரை பிரபலங்கள்!
காலையிலேயே வாக்களித்த அஜித், ரஜினி, சிவகார்த்திகேயன், தனுஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள்!

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தியாவில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் இன்று தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறும். முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் மே 7ம் தேதியும், நான்காம் கட்ட தேர்தல் மே 13ம் தேதியும், 5-ம் கட்ட தேர்தல் மே 20-ம் தேதியும், 6-ம் கட்ட தேர்தல் மே 25-ம் தேதியும், கடைசி மற்றும் 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதியும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கிய நிலையில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கை செலுத்தி வருகின்றனர். மேலும் நடிகர் அஜித் எடப்பாடி பழனிச்சாமி, தமிழிசை, உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகிறார்.

முதல் ஆளாக வாக்கை பதிவு செய்த அஜித்!

இந்நிலையில் இன்று காலை 7 மணி முதல் வாக்கு பதிவு தொடங்கி உள்ளது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க இருந்த நிலையில், நடிகர் அஜித் குமார் 6.40 மணிக்கே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்தார். காலை 7 மணிக்கு முதல் ஆளாக தன் வாக்கை பதிவு செய்தார்

நடிகர் ரஜினிகாந்த்

சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்கு சாவடி மையத்தில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.

“வாக்குரிமை இருக்கும் அனைவருமே கட்டாயம் வந்து வாக்கு செலுத்த வேண்டும். வாக்கு செலுத்துவதிக் மரியாதை, கௌரவம் இருக்கிறது. தயவு செஞ்சி எல்லாரும் ஓட்டு போட வேண்டும்” என ரஜினிகாந்த் தெரிவித்தார்.

சிவகார்த்தி கேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் இன்று காலையிலேயே தனது மனைவியுடன் வாக்கு சாவடி மையத்திற்கு சென்று தனது வாக்கை பதிவு செய்தார். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குசாவடியில் தனது வாக்கை சிவகார்த்தி கேயன் பதிவு செய்துள்ளார். 

ராதிகா - சரத்குமார்

சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா வாக்களித்தார். நடிகரும் ராதிகாவின் கணவருமான சரத்குமாரும் அதே வாக்குசாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

தனுஷ்

சென்னை டி.டி.கே சாலையில் உள்ள செயின்ட் சேவியர் பள்ளியில் நடிகர் தனுஷ் தனது வாக்கினை செலுத்தினார்.

தங்கர் பச்சான்

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் கடலூர் பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் வாக்களித்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்