தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Leo Update: முதலில் டைரடக்டர் கட், அப்புறம்..! இரண்டு வெர்ஷன்களில் வெளியாகும் லியோ! ரசிகர்களை குஷிப்படுத்திய அப்டேட்

Leo Update: முதலில் டைரடக்டர் கட், அப்புறம்..! இரண்டு வெர்ஷன்களில் வெளியாகும் லியோ! ரசிகர்களை குஷிப்படுத்திய அப்டேட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 14, 2023 10:57 AM IST

தளபதி விஜய்யின் லியோ படத்தை இரண்டு வெர்ஷன்கள் வெளியிடப்போவதாக அதன் வெளியீட்டு உரிமையை பெற்றிருக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கட் இல்லாமல் ரிலீஸ் செய்யப்பட இருக்கும் லியோ
கட் இல்லாமல் ரிலீஸ் செய்யப்பட இருக்கும் லியோ

ட்ரெண்டிங் செய்திகள்

இதையடுத்து லியோ படம் ரீலிஸாக இன்னும் ஆறு வாரம் இருக்கும் நிலையில் டிக்கெட் புக்கிங் யுகேவில் தற்போதே தொடங்கியுள்ளது. அங்கு இந்திய படம் ஒன்று ரிலீஸுக்கு ஒரு மாதத்துக்கு முன்னரே புக்கிங் தொடங்கியிருப்பது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

யுகேவில் இந்தப் படத்தை அகிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இதையடுத்து லியோ படத்தை இரண்டு வெர்ஷன்களாக அங்கு வெளியிட இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி படத்தில் எந்த கட்டும் இல்லாமல் முழுமையாக வெளியிட்டு ரசிகர்களிடம் சென்றடைந்த பின்னர், அனைவரும் பார்க்கும் விதமான வெர்ஷனை வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அகிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், "லோகேஷ் கனகராஜின் பார்வைக்கு மரியாதை அளிக்கும் விதமாக யுகேவில் நோ கட் வெர்ஷனை ரிலீஸ் செய்யவுள்ளோம்.

படத்தின் ஒவ்வொரு ப்ரேம்களும் அத்தியாவசியமாக இருப்பதுடன், அதனை அப்படியே அனுபவிக்க ரசிகர்கள் தகுதியுடைவர்களாக உள்ளார்கள்.

இந்தப் படம் பரவலாக ரசிகர்களை சென்றடைந்த பிறகு 12A வெர்ஷன் (12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பார்ப்பது) வெளியிடப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

 

இதன் மூலம், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கட் பார்க்க விரும்புவோருக்கான தகவலாக இது அமைந்துள்ளது. லியோ படத்தில் விஜய்யுடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் உள்பட பல்வேறு டாப் நடிகர்கள் நடித்துள்ளார்கள்.

படத்தின் இசை வெளியீடு இன்னும் சில நாள்களில் பிரமாண்டமாக நடத்தப்படும் என தெரிகிறது. அப்போது படத்தின் ட்ரெய்லரும் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்