தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Leo Movie: லியோ படத்தில் இடம்பெற்ற 'நா ரெடி' பாடலின் இந்த வரிகள் மட்டும் நீக்கம்-திரைப்பட சான்றிதழ் வாரியம் அதிரடி

Leo Movie: லியோ படத்தில் இடம்பெற்ற 'நா ரெடி' பாடலின் இந்த வரிகள் மட்டும் நீக்கம்-திரைப்பட சான்றிதழ் வாரியம் அதிரடி

Manigandan K T HT Tamil
Sep 09, 2023 09:53 PM IST

ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் லியோ படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மிஷ்கின், மன்சூர் அலிகான், சாண்டி, கெளதம் மேனன் உள்பட பலரும் நடிக்கிறார்கள்.

நா ரெடி வரவா பாடலில் இடம்பெற்ற ஒரு காட்சியில் விஜய்
நா ரெடி வரவா பாடலில் இடம்பெற்ற ஒரு காட்சியில் விஜய்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த ஆண்டில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் சமீபத்தில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இதைத்தொடர்ந்து ரிலீஸுக்கு ரசிகர்கள் மரண வெயிடிங்கில் இருக்கும் படமாக லியோ இருந்து வருகிறது. படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது படம் குறித்த புதிய செய்திகள் நாள்தோறும் வெளியான வண்ணம் உள்ளன. இந்நிலையில், தற்போது இந்தப் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலின் சில வரிகள் நீக்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் லியோ படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மிஷ்கின், மன்சூர் அலிகான், சாண்டி, கெளதம் மேனன் உள்பட பலரும் நடிக்கிறார்கள்.

படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். மிகப் பெரிய பட்ஜெட்டில் லலித் படத்தை தயாரிக்கிறார். லியோ படத்தின் இடைவேளை காட்சி கிட்டத்தட்ட 8 நிமிடங்கள் வருகிறது. அதை பார்த்த போது, புல்லரித்து விட்டதாகவும், படத்தை ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடுவார்கள் என படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் தெரிவித்திருந்தார்.

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் தோன்றிய இரண்டு முக்கிய கதாபாத்திரங்கள் லியோ படத்தில் வருவார்கள் என கூறப்படுகிறது. இதன் மூலம் லியோ தனிக்கதையாக இல்லாமல் லேகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்சான எஸ்சியூ பட வரிசையில் இணைகிறது.

விக்ரம் பட கிளைமாக்ஸில் ரோலெக்ஸ் என்ற கதாபாத்திரித்தில் சர்ப்ரைசாக தோன்றினார் சூர்யா. அவர் வரும் காட்சியில் செல்போனில் பேசுவது விஜய்யிடம் தான் என்ற ரசிகர்கள் பலரும் கிளப்பிவிட்டனர். இதையடுத்து விக்ரம் படத்தின் இரண்டு முக்கிய கதாபாத்திரங்கள் லியோவிலும் வரும் என்கிற தகவலான, அந்த கேரக்டர் யாராக இருக்கும் என்ற ஆராய்ச்சியில் பலரும் இறங்கியுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்