தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kavin Salary : 'இவ்வளவு ஆசையா? இது கொஞ்சம் ஓவர் தான்’.. ஒரே ஒரு ஹிட்.. சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய கவின்!

Kavin Salary : 'இவ்வளவு ஆசையா? இது கொஞ்சம் ஓவர் தான்’.. ஒரே ஒரு ஹிட்.. சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய கவின்!

Divya Sekar HT Tamil
May 12, 2023 12:56 PM IST

டாடா வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து பல படஙக்ளில் நடிக்க கதை கேட்டு வரும் கவின் தன்னுடைய சம்பளத்தையும் உயர்த்தி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கவின்
கவின்

ட்ரெண்டிங் செய்திகள்

இப்படம் தோல்வியடைந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் நடித்த லிப்ட் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து, இவர் நடிப்பில் சமீபத்தில், வெளியான 'டாடா' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ் நடிப்பில் பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியான திரைப்படம், டாடா. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.இந்த படத்திற்கு எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார், கதிரேஷ் அழகேசன், எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார், சண்முக ராஜ் கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

ஒரு அப்பா தன் மகனை அம்மா துணை இல்லாமல் ஒழுக்கமாக வளர்க்கிறார் மற்றும் இறுதியில் அவர்கள் எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதே படத்தின் கதையாகும். டாடா படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டினர். இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து பல படஙக்ளில் நடிக்க கதை கேட்டு வரும் கவின் தன்னுடைய சம்பளத்தையும் உயர்த்தி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி தற்போது வெளியாகியுள்ள தகவலில், நடன இயக்குனர் ஒருவர் தான் டைரக்டு செய்ய உள்ள படத்தில் கதாநாயகனாக நடிக்க கவினை அணுகியதாகவும் அந்த படத்தில் நடிக்க கவின் ரூ.2 கோடி சம்பளம் கேட்டதாகவும் தகவல் பரவி வருகிறது. 

ஒரு வெற்றி படத்திலேயே சம்பளத்தை ரூ.2 கோடியாக அவர் உயர்த்திவிட்டதாக கூறப்படுகிறது. அவ்வளவு தொகையை கொடுக்க இயக்குனர் மறுத்துவிட்டதாகவும் சொல்லபடுகிறது.

முன்பு ஒரு கோடி வரை சம்பளம் கேட்ட கவின், அதிரடியாக 2 கோடி சம்பளம் கேட்டார் என சொல்லப்படுகிறது. ஒரே ஒரு ஹிட் கொடுத்துட்டு இவ்வளவு ஆசையா? இது கொஞ்சம் ஓவர் தான் என நெட்சன்கள் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்