தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kavin Marriage: “மாப்பிள்ளைக்கு வெக்கத்த பாரு” - நீண்ட நாள் காதலியை கரம்பிடித்த கவின்! - வைரல் புகைப்படம்!

Kavin Marriage: “மாப்பிள்ளைக்கு வெக்கத்த பாரு” - நீண்ட நாள் காதலியை கரம்பிடித்த கவின்! - வைரல் புகைப்படம்!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 20, 2023 01:26 PM IST

பிரபல நடிகரான கவினின் திருமணம் இன்று நடந்தது.

கவினின் திருமணம் இன்று நடந்தது!
கவினின் திருமணம் இன்று நடந்தது!

ட்ரெண்டிங் செய்திகள்

 

‘கனா காணும் காலங்கள்' சீரியல் மூலம் சின்னத்திரையில் கால்பதித்த கவின், அதனை தொடர்ந்து சரவணன் மீனாட்சி தொடரில், வேட்டையன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

இதையடுத்து இயக்குனர் நெல்சனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த கவின், கடந்த 2019 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன ‘நட்புனா என்னனு தெரியுமா’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

இப்படம் தோல்வியடைந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கினார். அங்கு இவரும் நிகழ்ச்சியில் சகபோட்டியாளராக இருந்த லாஸ்லியாவும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த நிகழ்ச்சி முடிந்த உடன் இருவரும், அவரவரது வேலைகளை பார்த்து சென்று விட்டனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கவின் நடித்த ‘லிஃப்ட்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து, இவர் நடிப்பில் சமீபத்தில், வெளியான 'டாடா' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது.

இந்த நிலையில்தான் கவின் தன்னுடைய நீண்ட நாள் காதலியான மோனிகாவை இன்றைய தினம் (ஆகஸ்ட் 20) திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சொல்லப்பட்டது. அதன்படி, அவர்களது திருமணம் இன்றைய தினம் நடந்து இருக்கிறது. பிரபல காமெடி நடிகரான புகழ் திருமணத்திற்கு சென்று மணமக்களை வாழ்த்தி இருக்கிறார். இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

IPL_Entry_Point

டாபிக்ஸ்