தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: நட்சத்திராவை சிக்க வைக்க கார்த்திக் கொடுத்த ஐடியா.. கடைசியில் நடந்தது என்ன?

Karthigai Deepam: நட்சத்திராவை சிக்க வைக்க கார்த்திக் கொடுத்த ஐடியா.. கடைசியில் நடந்தது என்ன?

Aarthi V HT Tamil
Apr 24, 2023 02:10 PM IST

கார்த்திகை தீபம் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்
கார்த்திகை தீபம்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் கார்த்திக் தீபா சொன்னபடி பார்ட்டி நடக்கும் வீட்டுக்கு வந்து உள்ளே தேட செல்ல அதற்குள் ஐஸ்வர்யா நட்சத்திராவுக்கு தகவல் கொடுக்க அவள் கதிரை இங்கிருந்து கிளம்புமாறு சொல்லி விடுகிறாள்.

கார்த்திக் உள்ளே சென்றதும் கதிர் வெளியே வர வெளியே காத்திருக்கும் தீபா அவனைப் பார்த்து பிடிக்க முயற்சி செய்ய அவன் தீபாவுடன் சண்டையிட்டு தப்பிக்க முயலும் போது தீபா கழுத்தில் தாலி இருப்பதை பார்த்து விடுகிறான். பிறகு தீபாவிடம் இருந்து ஒரு வழியாக தப்பித்து ஓடுகிறான்.

மறுபக்கம் உள்ளே போன கார்த்திக் கதிரை தேடி அலைய அங்கிருந்தவர்கள் விஷயம் என்ன என கேட்க ஒருவரை தேடி வந்ததாக சொல்லி அங்கிருந்து வெளியேறுகிறான். நீங்க சொன்ன மாதிரி உள்ள யாரும் இல்லை என சொல்லி தீபாவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்புகிறான்.

மேலும் மீனாட்சிக்கு போன் போட்டு இந்த தகவல்களை சொல்லி நட்சத்திரா அவளது ரூமில் இருக்கிறாளா என்பதை கவனிக்க சொல்ல மீனாட்சி நட்சத்திரா ரூமின் கதவைத் தட்டுகிறாள். ரொம்ப நேரம் ஆகியும் நட்சத்திரா கதவை திறக்காமல் இருக்கிறாள். மீனாட்சி கதவை தட்டும் சத்தம் கேட்டு அபிராமி, அருணாச்சலம், ஐஸ்வர்யா என எல்லோரும் அங்கு ஒன்று கூடி விடுகின்றனர்.

இதனால் பதற்றம் அடையும் ஐஸ்வர்யா உடனடியாக நட்சத்திராவுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்லி சீக்கிரமாக வர சொல்கிறாள். அதற்குள் கார்த்தியும் வீட்டுக்கு வந்து விட அப்போது அவனிடம் நட்சத்திரா கதவை திறக்கவில்லை என்ற விஷயத்தை சொல்ல, அப்படினா கதவை உடைக்க வேண்டியது தானே என கார்த்திக் கதவை உடைக்க முயல்கிறான்.

இதற்குள் பின்பக்க வழியாக ரூமுக்குள் வரும் நட்சத்திரா தன்னுடைய பார்ட்டி உடையை மாற்றி நைட் ட்ரெஸ்ஸில் வந்து கதவை திறக்கிறாள். இவ்வளவு நேரம் தூங்கிட்டேன் அதனால் சத்தம் கேட்கவில்லை என சொல்லி இதை சமாளித்து நிம்மதி அடைகிறாள். அதே சமயம் இதில் ஏதோ மர்மம் இருக்கிறது அதை கூடிய விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என கார்த்திக் யோசிக்கிறான்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்