தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: ஐஸ்வர்யாவை செக்கப் அழைத்து வந்த அபிராமி.. கர்ப்பம் குறித்து உடையும் உண்மைகள்

Karthigai Deepam: ஐஸ்வர்யாவை செக்கப் அழைத்து வந்த அபிராமி.. கர்ப்பம் குறித்து உடையும் உண்மைகள்

Aarthi Balaji HT Tamil
Apr 18, 2024 01:23 PM IST

அபிராமிக்கு ஐஸ்வர்யாவின் கர்ப்பம் குறித்து நினைவுக்கு வர அவளை அழைத்து கொண்டு ஹாஸ்பிடல் கிளம்புகிறாள்.

கார்த்திகை தீபம்
கார்த்திகை தீபம்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம் மாரி. 

கடந்த வாரம், எப்படி நீ பூஜா ரூமுக்கு வரலாம்? அந்த தாலியை எப்படி தொடலாம், என்று ஆவேசப்பட்டு பேச, ரியா நான் தான் உங்க மூத்த மருமகள் என்று எதிர்த்து பேசி விட்டாள். இதனையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாக, ரியா அபிராமியை பிடித்து தள்ளி விடுகிறாள்.

அதில் கீழே விழ போன அபிராமியை தீபா தாங்கி பிடித்து, அத்தை மேலேயே கையை வைக்கிறியா என்று ரியாவை அறைகிறாள். பிறகு ஐஸ்வர்யாவை சந்தித்து நடந்ததை சொல்லும் ரியா, இதை ஆனந்திடம் சொல்ல போவதாக சொல்கிறாள்.

அதற்கு ஐஸ்வர்யா, ஆனந்துக்கிட்ட சொன்னீனா என்ன ஆச்சு? ஏன் இப்படி ஆச்சுனு கேட்பான். நீ அபிராமியை பிடித்து தள்ளுனது தெரிந்து விடும். அதனைதொடர்ந்து அம்மா பாசத்தில் உன்னையே வெளியே போக சொல்லிடுவான் என்று தடுக்கிறாள்.

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரியாவின் அத்தை மாமாவாக நடிக்க சீரியல் ஆர்ட்டிஸ்ட் இருவர் வீட்டிற்கு வர இவர்கள் பேசுவதை மைதிலி ஒட்டு கேட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, மைதிலி இந்த விஷயத்தை மீனாட்சி மற்றும் தீபாவிடம் சொல்கிறாள். தீபா அபிராமியை பார்க்க உட்கார்ந்தவர்களுக்கு காபியில் பேதி மாத்திரையை கலந்து கொடுத்து இதுல பேதி மாத்திரை கலந்து இருக்கேன், மரியாதையா ஓடி போய்டுங்க. இல்லனா அவ்வளவு தான் என்று மிரட்டுகிறாள்.

இதனை தொடர்ந்து அபிராமிக்கு ஐஸ்வர்யாவின் கர்ப்பம் குறித்து நினைவுக்கு வர அவளை அழைத்து கொண்டு ஹாஸ்பிடல் கிளம்புகிறாள். ஐஸ்வர்யா எங்கே போறோம் என்று கேட்க நீ கர்ப்பமா இருக்கேல அதான் ஹாஸ்பிடல் போய் வழக்கமான செக்கப் செய்துட்டு வரலாம். குழந்தை ஆரோக்கியமா இருக்கானு பார்க்கலாம் என்று சொல்ல ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைகிறாள்.

கிடைக்கும் சைடு கேப்பில் ரியாவுக்கு போனை போட்டு விஷயத்தை சொல்லி உதவி கேட்கிறாள், அவளும் ஒரு ஐடியாவை சொல்ல அந்த ஐடியா பெயிலியர் ஆகிறது. இதையடுத்து அபிராமி ஐஸ்வர்யாவை ஹாஸ்பிடலுக்கு அழைத்து வர டாக்டர் அவளை செக் செய்து கர்ப்பமில்லை என்ற உண்மையை உடைக்கிறார். இதனால் ஐஸ்வர்யா பேரதிர்ச்சி அடைகிறாள்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்