தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Chandramukhi 2: சந்திரமுகி ஆக மாறியிருக்கும் கங்கனா ரணவத் - படக்குழு வெளியிட்ட போஸ்டர்

Chandramukhi 2: சந்திரமுகி ஆக மாறியிருக்கும் கங்கனா ரணவத் - படக்குழு வெளியிட்ட போஸ்டர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 05, 2023 11:19 AM IST

தமிழில் மூன்றாவது படத்தில் நடித்திருக்கிறார் பாலிவுட் டாப் நடிகையான கங்கனா ரணவத். சந்திரமுகி 2 படத்தில் பிரதான கதாபாத்திரமான சந்திரமுகியாக தோன்றவுள்ளார்.

சந்திரமுகி 2 படத்தில் சந்திரமுகியாக நடிகை கங்கனா ரணவத்
சந்திரமுகி 2 படத்தில் சந்திரமுகியாக நடிகை கங்கனா ரணவத்

ட்ரெண்டிங் செய்திகள்

முதல் பாகத்தில் தோன்றிய வடிவேலு தவிர இந்த பாகத்தில் மற்ற நடிகர்கள் அனைவரும் புதியவர்களாக உள்ளார்கள். சந்திரமுகி 2 படத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார்.

இதையடுத்து படத்தின் பிரதான கதாபாத்திரமான வேட்டையன் கதாபாத்திரத்தின் லுக்கை படக்குழுவினர் கடந்த வாரம் வெளியிட்டனர். வேட்டையின் லுக்கில்் ராகவா லாரன்ஸ் இருக்கும் அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதைத்தொடர்ந்து படத்தின் இன்னொரு முக்கிய கதாபாத்திரமான சந்திரமுகி போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படத்தில் சந்திரமுகியாக பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் நடித்துள்ளார்.

 

படத்தின் ரஜினிகாந்த், ஜோதிகா ஆகியோர் கேமிய பாத்திரத்தில் தோன்றுவார்கள் என கூறப்படுகிறது.

மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படம் விநாயகர் சதுர்த்தி வெளியீடாக செப்டம்பர் 19ஆம் தேதி திரைக்கு வருகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்