தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kamal Haasan: ‘எங்களுக்கு உங்கள் நிழல் தேவை’.. ஆதிபுருஷூடன் மோதும் ஆண்டவர்; புராஜெக்ட் கே இணைந்த கமல்ஹாசன்!

Kamal Haasan: ‘எங்களுக்கு உங்கள் நிழல் தேவை’.. ஆதிபுருஷூடன் மோதும் ஆண்டவர்; புராஜெக்ட் கே இணைந்த கமல்ஹாசன்!

Kalyani Pandiyan S HT Tamil
Jun 25, 2023 12:54 PM IST

எங்களுக்கு இந்த உலகை மறைக்கும் அளவிற்கு ஒரு நிழல் தேவைப்பட்டது. அது நம் கமல் சார் மட்டுமே” என்று குறிப்பிட்டு இருக்கிறது.

Kamal Haasan joins Prabhas, Deepika Padukone for Project K
Kamal Haasan joins Prabhas, Deepika Padukone for Project K

ட்ரெண்டிங் செய்திகள்

இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்திருக்கிறது புராஜெக்ட் கே படக்குழு. மேலும் அந்தப்பதிவில் இந்தப்படத்தின் வாயிலாக பல திரையுலக சூப்பர் ஸ்டார்களை ஒன்றிணைக்கிறோம். எங்களுக்கு இந்த பூமியை மறைக்கும் அளவிற்கு ஒரு நிழல் தேவைப்பட்டது. அது நம் கமல் சார் மட்டுமே” என்று குறிப்பிட்டு இருக்கிறது.

இந்தப்படத்தை ‘கீர்த்தி சுரேஷ்’ நடித்த ‘நடிகையர் திலகம்’ படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கி வருகிறார். அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கும் இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். 

400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என சொல்லப்படுகிறது. சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஜானரில் உருவாகி வரும் இந்தத்திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடிக்க இருப்பதாகவும், அவருக்கு 150 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்