மதம் மாறும் முடிவில் நடிகை? சூர்யா ஜோதிகா சிறப்பு யாகம்! ரீ ரிலீசாகும் கமல் படம் - இன்றைய டாப் சினிமா செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  மதம் மாறும் முடிவில் நடிகை? சூர்யா ஜோதிகா சிறப்பு யாகம்! ரீ ரிலீசாகும் கமல் படம் - இன்றைய டாப் சினிமா செய்திகள்

மதம் மாறும் முடிவில் நடிகை? சூர்யா ஜோதிகா சிறப்பு யாகம்! ரீ ரிலீசாகும் கமல் படம் - இன்றைய டாப் சினிமா செய்திகள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Nov 26, 2024 11:40 PM IST

மதம் மாறும் முடிவில் நடிகை, சூர்யா ஜோதிகா சிறப்பு யாகம், ரீ ரிலீசாகும் கமல் படம், ஹாலிவுட்டில் அறிமுகமாகும் யோகி பாபு உள்பட இன்றைய டாப் சினிமா செய்திகள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்.

மதம் மாறும் முடிவில் நடிகை? சூர்யா ஜோதிகா சிறப்பு யாகம்! ரீ ரிலீசாகும் கமல் படம் - இன்றைய டாப் சினிமா செய்திகள்
மதம் மாறும் முடிவில் நடிகை? சூர்யா ஜோதிகா சிறப்பு யாகம்! ரீ ரிலீசாகும் கமல் படம் - இன்றைய டாப் சினிமா செய்திகள்

பெரிய ஹீரோக்கள் படம் இந்த வாரம் ரிலீஸ் ஆகாத நிலையில், தமிழில் இன்றைய டாப் சினிமா செய்திகளை பார்க்கலாம். 

ரீ-ரிலீசாகும் கமல்ஹாசனின் கல்ட் கிளாசிக் படம்

கடந்த 1991இல் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி, கல்ட் கிளாசிக் படமாக கொண்டாடப்பட்டு வரும் குணா திரைப்படம் தற்போது ரீ-ரிலீஸ் ஆகிறது. நவம்பர் 29ஆம் தேதி படத்தை ரீ-ரிலீஸ் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.

கமர்ஷியல் ரீதியாக வெற்றி படமாக இல்லாவிட்டாலும் ட்ரெண்ட் செட்டிங் படமாகவும், ரசிகர்களால் இன்று வரையிலும் கொண்டாடப்படும் படமாகவும் குணா இருந்து வருகிறது

சார்லி கதையின் நாயகனாக நடித்த படம் ஓடிடியில் ரிலீஸ்

தமிழ் சினிமாவில் காமெடி, குணச்சித்திர வேடங்களில் சுமார் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நடித்து வருபவர் நடிகர் சார்லி. இவர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் லைன்மேன். இந்த படத்தில் ஜெகன் பாலாஜி, அதிதி பாலன், சரண்யா உள்பட பலரும் நடித்துள்ளார்கள். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் லைன்மேன் படம் ஆஹா ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ளது.

ஆர்ஜே பாலாஜியின் சொர்க்க வாசல் படத்துக்கு ஏ

ஆர்ஜே பாலாஜி கதையின் நாயகனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் சொர்க்கவாசல். கடந்த இரு நாள்களுக்கு முன் வெளியான படத்தின் ட்ரெய்லர் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக இருக்கும் நிலையில், சொர்க்கவாசல் படத்துக்கு ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

நாகார்ஜூனா இரண்டாவது மகன் அகிலுக்கு திருமண நிச்சயதார்த்தம்

கடந்த ஆக்ஸ்ட் மாதம் மூத்த மகனும், நடிகருமான நாகசைதன்யா திருமண நிச்சியதார்த்தத்தை அறிவித்தார் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா. தற்போது இளைய மகன் அகில் அக்கினேனி திருமணம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தற்போது டபுள் கொண்டாட்டத்தில் நாகார்ஜுனா பேமிலி உள்ளது

மதம் மாறும் முடிவில் கீர்த்தி சுரேஷ்

பேபி ஜான் படம் மூலம் பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி புயலாக என்ட்ரி கொடுக்க இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், திருமணத்துக்காக மதம் மாறும் முடிவில் இருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன.

அடுத்த மாதம் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், தனது வருங்கால கணவர் கிறிஸ்தவர் என்பதால் அவர் மதம் மாறுவது குறித்து உத்தேசித்து வருவதாக கூறப்படுகிறது

சூர்யா - ஜோதிகா ஜோடியாக சாமி தரிசனம்

கங்குவா வசூல் கடுமையாக வீழ்ச்சி அடைத்திருக்கும் நிலையில் ஜோடியாக கார்நாடகாவில் உள்ள மூகாம்பிகை கோயிலில் சூர்யா - ஜோதிகா சாமி தரிசனம் செய்திருப்பதுடன் சிறப்பு யாகமும் நடத்தியுள்ளனராம். வாழ்க்கையில் சந்திக்கும் தடைகளில் இருந்து விலகவும், எதிரிகளை வீழ்ததவும் நடத்தப்படும் சண்டி யாகம் நடத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

அடுத்த ஸ்டார் தம்பதிகளை குறிவைத்த நெட்பிளிக்ஸ்

தெலுங்கு சினிமாவில் ஸ்டார் தம்பதிகளாக போகும் நாக சைதன்யா - சோபிதா துலிபாலா திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக இந்த ஜோடிக்கு ரூ. 50 கோடி கொடுத்துள்ளதாகவும் பேசப்படுகிறது.

சமீபத்தில் நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண விடியோவை நெட்பிளிக்ஸ் வெளியிட்டிருந்த நிலையில், தற்போது அடுத்த ஸ்டார் ஜோடிகளாக நாக சைதன்யா - சோபிதா குறி வைக்கப்பட்டுள்ளனர்

ஹாலிவுட்டில் அறிமுகமாகும் யோகிபாபு

திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட டெல் கே.கணேசனின் 'டிராப் சிட்டி' மூலம் ஹாலிவுட்டில் தடம் பதிக்கிறார் யோகி பாபு. முன்னதாக டெல் கணேசன் நெப்போலியனை ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்தி இருந்த நிலையில், தற்போது காமெடி நடிகர் யோகி பாபுவை அறிமுகப்படுத்தவுள்ளது.

ஹாலிவுட்டில் யோகி பாபு அறிமுகமாகும் படத்தில் அவர் ஆங்கில ராப் பாடலுக்கு மைக்கேல் ஜாக்சனைப் போல நடனமாடும் ஒரு தனித்துவமான காட்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

வெளியானது விடுதலை 2 ட்ரெயலர்

விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி உள்பட பலர் நடித்து வெற்றிமாறன் இயக்கியிருக்கும் விடுதலை 2 படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரிலீஸ்களில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் இசை வெளியீடு இன்று நடைபெற்ற நிலையில், படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது

ரூ. 100 கோடி எட்டிய கங்குவா வசூல்

ரூ. 350 கோடி பட்ஜெட்டில் மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா படம் எதிர்மறையான விமர்சனங்களால் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தள்ளாடியது. தற்போது பேமில் ஆடியன்ஸ் வருகையால் மெல்ல வசூல் உயர தொடங்கியிருக்கும் நிலையில் படம் வெளியான 12வது நாளில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலை எட்டியுள்ளது. தற்போது வரை படம் ரூ. 103 கோடி வசூலித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.