HBD Charlie: என்ன இத எல்லாம் செஞ்சிருக்காரா நடிகர் சார்லி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Charlie: என்ன இத எல்லாம் செஞ்சிருக்காரா நடிகர் சார்லி!

HBD Charlie: என்ன இத எல்லாம் செஞ்சிருக்காரா நடிகர் சார்லி!

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 06, 2023 06:50 AM IST

நடிகர் சார்லி பிறந்த நாள் இன்று (மார்ச் 6)

கோப்புப்படம்
கோப்புப்படம்

திருநெல்வேலி பக்கத்தில் உள்ள கோவில்பட்டியில் வேல்முருகன் தங்கசாமி மனோகர் என்ற சார்லி பிறந்தார். ஆசிரியரின் மகனான சார்லி ஆரம்பத்தில் ஆசிரியராகத்தான் ஆசைப்பட்டார். ஆனால் அவரை காலம் திரைத்துறைக்குள் இழுத்து விட்டது.

இயக்குநர் கே. பாலசந்தரின் பொய்க்கால் குதிரை திரைப்படம் மூலம் 1983 ஆம் ஆண்டில் அறிமுகமானார். நகைச்சுவை நடிகராகவும், துணை நடிகராகவும் சுமார் 800 தமிழ் படங்களில் நடித்துள்ளார். ஆங்கில நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் நினைவாக இவருக்கு சார்லி என கே.பாலச்சந்தர் பெயர் வைத்தார்.

கண்டிப்பான ஆசிரிய தகப்பனின் மகனான சார்லி சிறுவயதில் இருந்த அதே கட்டுப்பாட்டை திரையுலகிற்கு வந்த பின்னரும் கைவிட வில்லை.

திரையில் தான் ஏற்று நடிக்கும் பாத்திரங்களுக்கு ஏற்ப கண்ணாலேயே ரசிகர்களிடம் பேசி கொண்டிருப்பார் சார்லி. தனது கல்லூரி நாட்களில் மிமிக்ரி செய்வதில் ஆர்வம் கொண்டிருந்தார்.

முதல் படத்தில் காமெடியனாக நடிச்சதால் அப்பறம் காமடியனாகவே முத்திரை குத்திட்டாங்க என்பது சார்லியின் ஏக்கம். டிராமாவில் நடித்தவர் என்பதால் எல்லா கதாபாத்திரங்களையும் எடுத்து நடிக்கவே இவர் விரும்பினார். ஆனால் சந்தர்ப்பம் இவரை காமெடியானவே வலம் வர வைத்தது. ஆனால் சமயத்தில் தனக்கு கிடைக்கும் ஒரு சில குணச்சித்திர வேடங்களில் தன் ஆளுமையை நிலைநிறுத்த தவறவில்லை சார்லி. எத்தனையோ படங்கள் இருந்தாலும் குறிப்பாக வெற்றிக்கொடி கட்டு படத்தில் அதுவரை தான் ஏமாந்த கதையை இயலாமையை உருக உருக மனோரமாவிடம் சொல்லிகொண்டிருந்த பழனி பார்த்திபன் சொன்ன ஒரு வார்த்தையில் அப்படியே மனநிலை பாதிக்கப்பட்டவனை போல் மாறி நான் துபாய் நாட்டு இளவரசன் வசனம் பேச துவங்கும் பழனி… பார்ப்பவர்களின் கண்களை குளமாக்கும் காட்சி அது.

காதலுக்கு மரியாதையில் வெறும் ஹலோவை வைத்தே காமெடி செய்வதில் ஆரம்பித்து பல படங்களில் நம்மை சிரிக்க வைத்திருக்கிறார். பூவே உனக்காக, தென்காசிப்பட்டனம், உன்னை நினைத்து, ஜேஜே, கோவில் என 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட்டான பல படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

குறிப்பாக பிரெண்ட்ஸ் படத்தில் நடித்த கோவாலுவை யாராலும் அத்தனை எளிதில் மறந்து விட முடியாது.

2001-ம் ஆண்டு வெளியான பிரெண்ட்ஸ் படத்தின் நகைச்சுவைக் காட்சி கடந்த 2019ம் ஆண்டு உலக அளவில் ட்ரெண்டாக்கினர் நெட்டிசன்கள். எந்த அளவிற்கு அந்த படத்தில் காண்ட்ராக்டராக வடிவேலு நேசமணி நம்மிடம் பதிந்துள்ளாரோ அதே அளவிற்கு கோவாலுவும் நம் மனதை விட்டு நீங்க வாய்பே இல்லை. ‘அம்மா பால்’ என்று ஒருவர் சொல்ல, ‘ஆமா நான்தான் கோபால்’ என்று தூங்கி இவர் எழுந்திருக்க ஆரம்பித்ததில் இருந்து ‘இது யாரு உன் ஒயிஃபா’ என்று கேட்பது, ‘கரெக்ட் அவர் பிடிக்கலை நான் பார்த்தேன்’ என்று சொல்வது என அந்த கேரக்டராகவே வாழ்த்திருப்பார் சார்லி.  உன்னை நினைத்து படத்தில் வரும் ஜோசிய காரரை பார்த்து சிரிக்காதவர்கள் இல்லை. அதனால் தமிழ் சினிமாவின் காமெடியை பற்றி பேசுபவர்களாலும், நேசிப்பவர்களாலும், எழுதுபவர்களாலும் கண்டிப்பாக சார்லியை மிஸ் பண்ணவே முடியாது.

அது மட்டும் அல்ல திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தாலும் தொடர்ச்சியாக உலக இலக்கியம், சினிமா உள்ளிட்ட புத்தகளை வாசித்து வருகிறவர். வாசிப்போடு மட்டும் தன்னை சுருக்கி கொள்ள வில்லை சார்லி. கடந்த 2013ம் ஆண்டு தமிழ் திரைபட வளர்ச்சிக்கு நகைச்சுவை நடிகர்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் அழகப்பா பல்கலை கழகத்தில் எம்.பில் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டும்மல்ல வெளி உலகிற்கு தெரியாமல் தொடர்ச்சியாக மாணவர்களுக்கு தன்னால் ஆன உதவியை செய்து வருபவர் சார்லி.

சுமார் 800 படங்களில் நடித்து தன்னை நிரூபித்திருந்தாலும் இன்றும் வீதிநாடகம், வானொலி நாடகம் குறும்படம் என்று ஓயாமல் ஓடிக்கொண்டே இருக்கும் இளைஞர் சார்லிக்கு இன்று வயது 63. இந்த பிறந்தநாளில் ஹெச்டி தமிழ் சார்பில் நாங்களும் வாழ்த்துகிறோம் சார்லி சார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.