"பேயிக்கும் பேயிக்கும் சண்ட.. காப்பி ரைட்ஸ் ரூல் தெரியாது.. பேசவே பயமா இருக்கு" பங்கமாக கலாய்த்த ஆர்ஜே பாலாஜி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  "பேயிக்கும் பேயிக்கும் சண்ட.. காப்பி ரைட்ஸ் ரூல் தெரியாது.. பேசவே பயமா இருக்கு" பங்கமாக கலாய்த்த ஆர்ஜே பாலாஜி

"பேயிக்கும் பேயிக்கும் சண்ட.. காப்பி ரைட்ஸ் ரூல் தெரியாது.. பேசவே பயமா இருக்கு" பங்கமாக கலாய்த்த ஆர்ஜே பாலாஜி

Malavica Natarajan HT Tamil
Nov 20, 2024 12:14 PM IST

நடிகர் தனுஷ் மற்றும் நயன்தாரா பிரச்சனையால் ஊரே சந்தோஷமாக இருப்பதாக நடிகரும் இயக்குநருமான ஆர்ஜே பாலாஜி கிண்டலாக பேசியுள்ளார்.

"பேயிக்கும் பேயிக்கும் சண்ட.. காப்பி ரைட்ஸ் ரூல் தெரியாது.. பேசவே பயமா இருக்கு" பங்கமாக கலாய்த ஆர்ஜே பாலாஜி
"பேயிக்கும் பேயிக்கும் சண்ட.. காப்பி ரைட்ஸ் ரூல் தெரியாது.. பேசவே பயமா இருக்கு" பங்கமாக கலாய்த ஆர்ஜே பாலாஜி

பேயிக்கும் பேயிக்கும் சண்டை

இதையடுத்து, அவர் இந்தப் பிரச்சனைகள் குறித்து பேசினார். அதில், தனுஷ்கும் நயன்தாராவுக்கும் இருக்க பிரச்சனையை எப்படி எடுத்துக்கணும்ன்னு எனக்கே தெரியல. நானும் உங்கள மாதிரி ஆன்லைன்ல பாத்து தான் தெரிஞ்சிகிட்டேன். பேய்க்கும் பேய்க்கும் சண்டை.. ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்ன்னு சொல்ற மாதிரி கூத்தாடி ரெண்டு பட்டா ஊருக்கே சந்தோஷம்ன்னு இருக்காங்க.

என்னமோ நடக்குது

இந்த விஷயத்துக்குள்ள வேற என்னமோ நடக்குது. நடக்குறத நாமளும் வேடிக்க பாக்குறோம். எனக்கு இதுல கருத்து சொல்ல என்ன இருக்கு. தனுஷே அதுக்கு பதில் சொல்லல. நம்ம என்ன அதுக்கு பதில் சொல்லிட்டு. அவங்களுக்குள்ள அவங்க பேசிப்பாங்க.

2 பேருமே பெரிய நடிகர்கள். மெச்சூர்டு அடல்ட்ஸ். அதுனால இத லீகலா டீல் பண்ணலாம். இல்ல சோசியல் மீடியா மூலமா டீல் பண்ணலாம். இந்தப் பிரச்சனைய அவங்களே பாத்துப்பாங்க.

இந்த பஞ்சாயத்தால 24 மணி நேரமும் எல்லாருக்கும் எண்டெர்டெயின்மெண்ட்டா இருந்துருக்கு. இத பத்தி சொன்னாலே சிரிக்குறாங்கன்னா அது எல்லாருக்கும் அப்டி தான் இருந்துருக்கு.

அப்போ என்னோட போட்டோ யூஸ் பண்ணுனாலும் காசா?

நானும் ரவுடி தான் படத்தோட பாட்டு எல்லாம் போடுவிங்களா இல்ல அதுக்கும் காப்பி ரைட்ஸ் இருக்கான்னு கேக்குறாங்க என ஆங்கர் கேட்டபொழுது, ஓ அந்த அளவுக்கு இது ஆச்சான்னு கேட்டார். பின், அந்தப் படத்தில் நான் கொண்டை ஒன்னு வச்சிட்டு இருக்க போட்டோவ எல்லாரும் மீம்-ஆ யூஸ் பண்றாங்க. அதெல்லாம் பிரச்சனை ஆகிடுமான்னும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ஆங்கர், அது வெறும் போட்டோ தான். 3 செகண்ட் வீடியோ ரிலீஸ் ஆனா தான் பிரச்சனை எனக் கூறினார்.

இதையடுத்து, எனக்கு ரூல்ஸ் தெரியாது. ஆனா, எல்லோரோட சண்டையையும் நாம எடுத்து போட முடியாது. அவங்களுக்குள்ள ஒரு பிரச்சனை இருக்கு. அதை அவங்க பேசி தீத்துப்பாங்க., இல்ல சண்டை போட்டு கூட தீத்துக்கட்டும். இதுல நானோ அல்லது வேறு யாராவகு 3வது மனிதர் கருத்து சொல்ல எந்த அவசியமும் இல்ல.

பேசவே பயமா இருக்கு

நம்ம எல்லாருக்கும் நம்ம வாழ்க்கையே ரொம்ப பெருசு. எனக்கு அடுத்த படம் ரிலீஸ்க்கு ரெடியா இருக்கு. சூர்யா சார் கூட ஒரு படம் டைரக்ட் பண்ணனும். இவ்ளோ வேலை இருக்கும் போது நான் இதுல ஏன் மத்தவங்க சண்டைய போட்டுட்டு இருக்கனும் எனக் கூறினார்.

அந்த சமயத்தில் படத்தின் ஸ்கீரின் ப்ளே குறித்து ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, என்னால் முடிந்த அளவு நல்லா பண்ணிருக்கேன். இப்போ எல்லாம் எதாவது சொல்லனும்னாலே பயமா இருக்கு என கங்குவா படத்தை பற்றி சொல்லாமல் சொன்னார்.

விக்னேஷ் சிவன், நடிகர் தனுஷின் உண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் நயன்தாரா, விஜய் சேதுபதி கூட்டணியில் நானும் ரவுடி தான் எனும் படத்தை இயக்கினார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் தான் நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவனிற்கும் காதல் ஏற்பட்டது. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள "தங்கமே உன்னத்தான்" "கண்ணான கண்ணே" "எனை மாற்றும் காதலே"போன்ற பாடல்களை விக்னேஷ் சிவன் முழுக்க முழுக்க நயன்தாராவிற்காகவே எழுதியிருப்பார்.

நயன்தாரா: பியாண்ட் தி பேரிடேல்

இந்தப் படத்தின் அனைத்து பாடல்களையும் விக்னேஷ் சிவன் தன் காதலை நயன்தாராவிடம் வெளிப்படுத்தும் விதமாக அமைத்திருப்பார். இந்நிலையில், நடிகை நயன்தாரா தன் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளை மையப்படுத்தி, நயன்தாரா: பியாண்ட் தி பேரிடேல் எனும் ஆவணப்படத்தை வெளியிட விரும்பினார். இந்த அறிவிப்பை தனது திருமணம் முடிந்த உடன் அறிவித்தார்.

நயன்தாரா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் நானும் ரவுடி தான், தன் காதல் கதை தொடங்கிய இந்தப் படத்தை விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் கொண்டாடினர். ஆனால், அந்தப் படத்தின் பாடல்களையோ, காட்சிகளையோ இவர்களால் பொது வெளியில் பயன்படுத்த முடியாது. காரணம் இப்படத்தை தயாரித்த நடிகர் தனுஷ் பாடல் காட்சியை 3 வினாடி பயன்படுத்தியதற்கே 10 கோடி தரவேண்டும் என வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.