கங்குவா வசூல்! எங்களுக்கும் கடவுள் பக்தி இருக்கு..ஜோடியாக மூகாம்பிகை கோயிலில் சூர்யா - ஜோதிகா சாமி தரிசனம்
கங்குவா வசூல் கடுமையாக வீழ்ச்சி அடைத்திருக்கும் நிலையில் ஜோடியாக கார்நாடகாவில் உள்ள மூகாம்பிகை கோயிலில் சூர்யா - ஜோதிகா சாமி தரிசனம் செய்திருப்பதுடன் சிறப்பு யாகமும் நடத்தியுள்ளனர்.

சூர்யா நடிப்பில் இரண்டு ஆண்டுகள் கழித்து கடந்த 14ஆம் தேதி வெளியாகியிருக்கும் கங்குவா படத்துக்கு எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்த படத்தின் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து படம் தொடர்பாக பலரும் எதிர்மறை கருத்துகளை வேண்டுமென்றே பரப்புவதாக சூர்யாவின் மனைவியும், நடிகையுமான ஜோதிகா கருத்து தெரிவித்திருந்தார்.
இதையடுத்து கங்குவா படம் ரிலீசாகி இரண்டு வாரங்கள் ஆகியிருக்கும் நிலையில், தற்போது பேமிலி ஆடியன்ஸ் தயவால் படத்தின் வசூல் மெல்ல அதிகரித்து வருகிறது. ரூ. 400 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் கங்குவா படம் தற்போது ரூ. 100 கோடிக்கு மேல் வசூலை எட்டியுள்ளது.
வரும் வாரம் பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாத நிலையில், டிசம்பர் 5ஆம் தேதி பான் இந்தியா படமான புஷ்பா 2 ரிலீஸ் ஆக இருக்கிறது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் கங்குவா வசூலை குவித்தால் மட்டுமே தப்பிக்க முடியும்.