தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Pulimada Update : ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் கைகோர்க்கும் ஜோஜு ஜார்ஜ்.. வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

Pulimada Update : ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் கைகோர்க்கும் ஜோஜு ஜார்ஜ்.. வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

Divya Sekar HT Tamil
Aug 12, 2023 11:42 AM IST

புலிமடா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதன் பெயரிலும் வடிவமைப்பிலும் வித்தியாசமாக உள்ளது, ஐஸ்வர்யா ராஜேஷ் கையை ஜோஜு ஜார்ஜ் பிடித்திருப்பதைக் காணலாம்.

ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் கைகோர்க்கும் ஜோஜு ஜார்ஜ்
ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் கைகோர்க்கும் ஜோஜு ஜார்ஜ்

ட்ரெண்டிங் செய்திகள்

ஐன்ஸ்டீன் மீடியா மற்றும் லேண்ட் சினிமாஸ் பேனரில் ஐன்ஸ்டீன் சேக் பால் மற்றும் ராஜேஷ் தாமோதரன் ஆகியோர் இந்த படத்தை தயாரித்து உள்ளனர். இயக்குனர் ஜோஷி மற்றும் ஜோஜுவின் ஆண்டனி படமும் ஐன்ஸ்டீன் மீடியா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.

பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த "இரட்டா" படத்திற்குப் பிறகு ஜோஜு ஜார்ஜ் நடிக்கும் அடுத்த படம் "புலிமடா". இப்படத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், பத்து வருட இடைவெளிக்குப் பிறகு பிரபல ஒளிப்பதிவாளர் வேணு படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். 60 நாட்களில் ஒரே ஷெட்யூலில் படமாக்கப்பட்டு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை கொண்ட மிகப்பெரிய பட்ஜெட் படம் புலிமடா. 

தமிழில் சூப்பர் ஹிட்டான ஜெய் பீம் படத்திற்கு பிறகு புலிமடா படத்திலும் லிஜோமாள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் செம்பன் வினோத், ஜானி ஆண்டனி, ஜாபர் இடுக்கி, ஜியோ பேபி, அபு சலீம், சோனா நாயர், கிருஷ்ண பிரபா, பாலி வில்சன், ஷிபிலா, பாலச்சந்திர மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

போலீஸ் கான்ஸ்டபிள் வின்சென்ட் ஸ்காரியாவின் (ஜோஜு ஜார்ஜ்) திருமணமும், அது தொடர்பான நிகழ்வுகளும், அவரது குணாதிசயத்திலும், வாழ்க்கையிலும் ஏற்படும் மாற்றங்களும் புலிமடா மூலம் பார்வையாளர்களுக்கு முன்வைக்கப்படுகின்றன. தலைப்பிற்கு ஏற்றாற்போல், வித்தியாசமான கதையம்சம் கொண்ட படத்தை ரசிகர்களுக்கு கொடுக்க உள்ளார் இயக்குனர் ஏ.கே.சஜன்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்