Vishal: அரசியலுக்கு வருவேன் என்றால் இதுதான் கதியா?..விஷாலுக்கு ஆதரவு குரல் கொடுத்த ஜெயக்குமார்
Jayakumar: 'ரத்னம்' திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் கட்டப்பஞ்சாயத்து செய்து வெளியிட விடாமல் ஏன் தடுக்க வேண்டும்? அரசியலுக்கு வருவேன் என்றால் இதுதான் கதியா? என விஷாலுக்கு ஆதரவு குரல் கொடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

விஷால், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
நடிகர் விஷால், ரத்னம் படத்திற்கு எதிராக கட்டப்பஞ்சாயத்து நடந்து வருவதாக குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளார்.
இது தொடர்பாக விஷால் தனது எக்ஸ் தளத்தில் காட்டமான பதிவு ஒன்றை வெளியீட்டு உள்ளார். அதில், “ இறுதியாக கட்டப்பஞ்சாயத்து எந்த பயமோ, வருத்தமோ இல்லாமல் நடந்து கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவுக்கு, தியேட்டர் அசோசியேஷனின் அன்பான செயற்குழு உறுப்பினர்களே, கங்காரு நீதிமன்றங்கள் இன்னும் இருக்கிறது மற்றும் இருக்கும் என்பதை உறுதிப்படுத்துவதன் மூலம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.
ஆனால் என்னைப் போன்ற ஒரு போராளிக்கு முன்பு இது எல்லாம் ஒன்றும் கிடையாது. சற்று தாமதமானாலும் நிச்சயம் உங்களை நீதியின் மூலம் வீழ்த்துவேன். எல்லா தயாரிப்பாளர்களுக்கும் குடும்பம் இருக்கிறது என்று எண்ணும் நபர் நான்.