தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Jailer Movie : "கனவு போல் உள்ளது" - ஜெயிலர் படத்தின் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் நெகிழ்ச்சி பதிவு!

Jailer Movie : "கனவு போல் உள்ளது" - ஜெயிலர் படத்தின் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் நெகிழ்ச்சி பதிவு!

Divya Sekar HT Tamil
Aug 12, 2023 10:56 AM IST

ஜெயிலர் படத்தின் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் தனது டிவிட்டர் பக்கத்தில்"கனவு போல் உள்ளது" என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

ஜெயிலர் படத்தின் ஒளிப்பதிவாளர்
ஜெயிலர் படத்தின் ஒளிப்பதிவாளர்

ட்ரெண்டிங் செய்திகள்

இதற்கு முன்னதாக இயக்குநர் நெல்சன் விஜயை வைத்து ‘பீஸ்ட்’ திரைப்படத்தை இயக்கி இருந்தார். அந்தப்படம் ரசிகர்களிடம் கடுமையான விமர்சனங்களைப் பெற்றது.

ரஜினிக்கும் அவரின் கடந்த சில திரைப்படங்கள் பெரிதளவில் வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில்தான் இருவருக்கும் இந்தத்திரைப்படம் ஒரு கம் பேக் திரைப்படமாக அமைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

எதிர்பார்த்தது போல அந்தத்திரைப்படம் அவர்களுக்கு கம் பேக் திரைப்படமாகவே அமைந்து விட்டது. காரணம் படம் பார்த்த பெரும்பான்மையான ரசிகர்களுக்கு ஜெயிலர் திரைப்படம் பிடித்திருக்கிறது. முதல் நாளில் மட்டும் இந்தத்திரைப்படம் 95. 78 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை சன் நெக்ஸ்ட் நிறுவனம் வாங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளதால், இந்த படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பாளர்கள் முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.

சன் நெக்ஸ்ட் மட்டுமின்றி, ஜெயிலரும் நெட்ஃபிளிக்ஸிலும் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இந்த படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமைக்காக நெட்ஃபிளிக்ஸ் முயற்சி எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. ஜெயிலர் செப்டம்பர் இறுதியில் ஓடிடிக்கு வரும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜெயிலர்' படத்தின் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “தலைவர் நிரந்தரம். நன்றி நன்றி. கனவு போல் உள்ளது மிக்க நன்றி "  ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் பதிவிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்