தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Dhoni Vijay: தோனி தயாரிப்பில் விஜய் நடிக்கும் படம்? - Lgm இயக்குநர் பேட்டி!

Dhoni Vijay: தோனி தயாரிப்பில் விஜய் நடிக்கும் படம்? - LGM இயக்குநர் பேட்டி!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 16, 2023 11:02 AM IST

விஜயும் தோனியும் இணைவதற்கு வாய்ப்பியிருக்கிறதா? என்பதற்கு பிரபல இயக்குநர் பதில் அளித்திருக்கிறார்.

தோனி - விஜய்
தோனி - விஜய்

ட்ரெண்டிங் செய்திகள்

இது குறித்து அவர் கொடுத்த பேட்டியில், “ அதிகாரப்பூர்வமாக அந்த திரைப்படம் குறித்து அவர்கள் எதுவுமே பேசவில்லை. அவர்கள் அன்று கேரவனில் சந்தித்த உடன் இவர்களாக எழுதிக்கொண்டார்கள். தோனி தரப்பு மிகவும் ஓப்பனாக இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லா மொழிகளிலும் படம் செய்ய வேண்டும் என்பது ஆசை. 

ஆனால் அவர்கள் பெரிதாக பார்ப்பது கதையம்சத்தைதான். அது மாஸ், கமர்ஷியல் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அவை தரம் மிக்கவையாக இருக்க வேண்டும். விஜய் சார் ஒருவேளை தோனியின் தயாரிப்பில் நடிக்க ஒத்துக்கொண்டால் நிச்சயம் அவர்கள் அந்த திரைப்படத்தை தயாரிக்க தயாராக இருக்கிறார்கள். அப்படி ஒரு விஷயம் கண்டிப்பாக நடக்கும்.” என்று அவர் பேசினார்.

முன்னதாக எல்.ஜி.எம் படம் குறித்து அவர் பேசும் போது, “இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம். எஸ். தோனியுடனும், 'எல். ஜி. எம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்குடனும் இருந்த தருணங்கள் என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத தருணங்கள். நாங்கள் மூன்று வெவ்வேறு இடங்களில் முக்கிய காட்சிகளை படமாக்கினோம், இப்போது இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே உள்ளது. எடிட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளின் போது அவர் எங்களுடன் உட்காருவேன் என என்னிடம் சொல்லி இருக்கிறார்'' என்றார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்