தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Oscar 2024: ’வட இந்தியாவின்பாலியல் குற்றங்கள் பற்றி பேசும் To Kill A Tiger ஆவணப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை!'

Oscar 2024: ’வட இந்தியாவின்பாலியல் குற்றங்கள் பற்றி பேசும் To Kill A Tiger ஆவணப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை!'

Kathiravan V HT Tamil
Jan 24, 2024 10:46 AM IST

”ஜார்க்கண்டில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தனது மகளுக்கு நீதி கோரி போராடும் ஒரு நபரின் கதையை டு கில் எ டைகர் படம் சொல்கிறது”

To Kill A Tiger ஆவணப்படம்
To Kill A Tiger ஆவணப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

டெல்லியில் பிறந்த நிஷா பஹுஜா இயக்கிய கனடிய தயாரிப்பான இந்த படம், ரஞ்சித்தின் மகளை கடத்தி கொடூரமாக தாக்கிய மூன்று நபர்கள் குறித்தும் மகளுக்காக நீத்கேட்டு போராடும் ரஞ்சித்தின் போராட்டம் குறித்தும் பேசுகிறது. 

"இந்தியாவில் உள்ள ஒரு விவசாயி, அவரது மனைவி மற்றும் அவர்களின் 13 வயது மகள் ஆகியோர் தனது மனித உரிமைகளைக் கோருவதற்கான தைரியத்தைக் கொண்டிருந்ததால் நாங்கள் இந்த நேரத்தில் இங்கு இருக்கிறோம்" என்று அகாடமி பரிந்துரைகளை அறிவித்த பின்னர் பஹுஜா கூறினார். 

2012 ஆம் ஆண்டு வெளியான ’தி வேர்ல்ட் பிஃபோர் ஹெர்’ என்ற ஆவணப்படத்திற்காக எம்மி விருதுக்கும் பஹுஜா பரிந்துரை செய்யப்பட்டு இருந்தார். 

"இந்த படம் மற்றவர்களை நீதியைத் தேட ஊக்குவிப்பதும், பாலின சமத்துவத்திற்கான எங்கள் போராட்டத்தில் ஆண்கள் எங்களுடன் நிற்க வேண்டும் என்பதுமே எங்கள் நோக்கம் என்று பஹுஜா கூறி உள்ளார். 

இந்த கதையில் "ரஞ்சித் காவல்துறையில் புகார் செய்ய அந்த நபர்கள் கைது செய்யப்படுகிறார்கள். ஆனால் கிராமவாசிகளும் அவர்களின் தலைவர்களும் குற்றச்சாட்டுகளை கைவிட குடும்பத்தை கட்டாயப்படுத்துகின்றனர். அதை மீறி ரஞ்சித் வென்றாரா என்பதே திரைப்படத்தின் மற்றகதையாக உள்ளது. 

"இந்தியாவில், ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒரு கற்பழிப்பு பதிவாகிறது மற்றும் தண்டனை விகிதம் 30% க்கும் குறைவாக உள்ளது. 

96-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஓவேஷன் ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் மார்ச் 10-ம் தேதி நடைபெறுகிறது. ஜிம்மி கிம்மல் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக விழாவை தொகுத்து வழங்க திரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

IPL_Entry_Point

டாபிக்ஸ்