தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ileana Dcruz: “மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தை இல்லை” .. அம்மாவான இலியானா.. என்ன குழந்தை.. என்ன பெயர்?

Ileana DCruz: “மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தை இல்லை” .. அம்மாவான இலியானா.. என்ன குழந்தை.. என்ன பெயர்?

Kalyani Pandiyan S HT Tamil
Aug 06, 2023 11:46 AM IST

இலியானாவிற்கு குழந்தை பிறந்து இருக்கிறது.

இலியானாவிற்கு குழந்தை பிறந்து இருக்கிறது!
இலியானாவிற்கு குழந்தை பிறந்து இருக்கிறது!

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழில் கடந்த 2012 -ல் விஜய்க்கு ஜோடியாக நண்பன் படத்தில் இணைந்தார். இந்தத்திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது. குறிப்பாக அந்தப்படத்தில் இடம் பெற்ற ‘இருக்கானா இடுப்பிருக்கானா’ பாடல் இவரை பட்டித்தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது.

 

இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அதே நேரம் அவர் தன்னுடைய குழந்தைக்கு யார் தந்தை என்பது குறித்தான விபரங்களை வெளியிடவில்லை. இதனைத்தொடர்ந்து அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘டேட் நைட்’ என்று குறிப்பிட்டு காதலன் புகைப்படத்தை பகிர்ந்தார்.

இந்த நிலையில் அவர் தற்போது தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தெரிவித்து, குழந்தையின் புகைப்படத்தையும் அவர் பதிவிட்டு இருக்கிறார். மேலும் குழந்தைக்கு 'Koa Phoenix Dola' என பெயர் சூட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். 'Koa’ - என்றால் போர் வீரன் என்று அர்த்தமாம். 

இது மட்டுமல்லாமல் நாங்கள் எங்கள் ஆண் குழந்தையை இந்த உலகிற்கு வரவேற்பதில் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதை விவரிக்க வார்த்தைகளே இல்லை என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டு இருக்கிறார். இதற்கு பிரபலங்கள், ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

முன்னதாக இலியானா ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரூ நீபோன் என்ற புகைப்பட கலைஞரை இலியானா சில ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து வந்தார். ஆனால் சில ஆண்டுகளிலேயே அவர் ஆண்ட்ரூவுடன் காதல் முறிவு ஏற்பட்டுவிட்டது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்