தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hindi Actress Jenifer : ‘ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தினர்’ தயாரிப்பாளர் மீது இந்தி நடிகை பரபரப்பு புகார்

Hindi Actress Jenifer : ‘ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தினர்’ தயாரிப்பாளர் மீது இந்தி நடிகை பரபரப்பு புகார்

Priyadarshini R HT Tamil
May 12, 2023 11:37 AM IST

Hindi Actress Jenifer : தயாரிப்பாளர் பலமுறை என்னை ஆசைக்கு இணங்க அணுகினார். அவர்களுக்கு எதிரக நடந்துகொண்டால், தொடரில் இருந்து நீக்கி விடுவார்கள் என்று பொறுமையாக இருந்தேன். கடைசியாக வேறு வழி இல்லாமல் அந்த தொடரில் இருந்து அவர்களின் தொல்லை தாங்க முடியாமல் அந்தத் தொடரில் இருந்து வெளியேறினேன்.

பாலியல் புகார் கொடுத்த இந்தி நடிகை ஜெனிபர்
பாலியல் புகார் கொடுத்த இந்தி நடிகை ஜெனிபர்

ட்ரெண்டிங் செய்திகள்

அதில் சிலர் தைரியமாக வெளியில் வந்து அதுபோன்ற அத்துமீறல்களை வெளிப்படுத்திவிடுகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் அந்த பாலியல் அத்துமீறல்கள் மீ டூ என்ற பெயரில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. மீ டூ விவகாரம் பெரிதானபோது, நிறைய திரைப்பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, அவை வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

அந்தவகையில் இந்தி நடிகை ஜெனிபர் பன்சிவால் தனக்கு ஏற்பட்டு பாலியல் அத்துமீறல்கள் குறித்து தெரிவித்துள்ளார்.

பிரபல இந்தி நடிகை ஜெனிபர் மிஸ்ட்ரி பன்சிவால். இவர் ஹல்லா போல், கிராஸி 4, ஏர்லிபட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். டி.வி தொடர் படப்பிடிப்பில் தனக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டதாக ஜெனிபர் மிஸ்ட்ரி பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,

‘தாரக் மேத்தா கா ஊல்தா சாஸ்மா என்ற தொடரில் நடித்தபோது பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டேன். அந்த தொடரின் தயாரிப்பாளர் அசித்மோடி மற்றும் இரண்டு பேர் என்னிடம் தவறாக நடக்க முயன்றனர். அவர்களின் ஆசைக்கு என்னை இணங்கும்படி வற்புறுத்தினர். ஆனால் அதற்கு நான் கொஞ்சமும் உடன்படவில்லை.

தயாரிப்பாளர் பலமுறை என்னை ஆசைக்கு இணங்க அணுகினார். அவர்களுக்கு எதிரக நடந்துகொண்டால், தொடரில் இருந்து நீக்கி விடுவார்கள் என்று பொறுமையாக இருந்தேன். கடைசியாக வேறு வழி இல்லாமல் அந்த தொடரில் இருந்து அவர்களின் தொல்லை தாங்க முடியாமல் இருந்து வெளியேறினேன். ஆனாலும் ஒரு சில பெண்கள் அவர்களின் விருப்பங்களுக்கு இணங்கினர். தொடரில் வேலை பார்த்த எல்லோரையும் கொத்தடிமைபோல் நடத்தினர்'' என்றார். ஜெனிபர் மிஸ்ட்ரியின் இந்த பாலியல் புகார் பாலிவுட் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்