தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தெலுங்கில் முதல்முறையாக உருவாகிய புலனாய்வுப் படம் The Trail - வெளியான முக்கிய அப்டேட்

தெலுங்கில் முதல்முறையாக உருவாகிய புலனாய்வுப் படம் The Trail - வெளியான முக்கிய அப்டேட்

Marimuthu M HT Tamil
Nov 10, 2023 03:39 PM IST

தெலுங்கு சினிமாவில் முதல் விசாரணைத் திரைப்படமாக உருவாகி உள்ள The Trail படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தெலுங்கில் முதல்முறையாக உருவாகிய புலனாய்வுப் படம் - The Trail
தெலுங்கில் முதல்முறையாக உருவாகிய புலனாய்வுப் படம் - The Trail

ட்ரெண்டிங் செய்திகள்

டோலிவுட்டில் முதல் விசாரணை திரைப்படமாக The Trail படம் உருவாகியுள்ளது. இப்படத்தினை எஸ்.எஸ்.பிலிம்ஸ் மற்றும் காமன் மேன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. The Trail திரைப்படத்தை ராம் கன்னி இயக்கியுள்ளார். ஸ்பந்தனா பாலி, யுக் ராம் மற்றும் வம்சி கொடு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். The Trail படத்திற்கு சரவண வாசுதேவன் இசையமைக்க, சாய் குமார் தாரா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படக்குழுவால் வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ஏற்கனவே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கிய நிலையில் பட வெளியீட்டுத்தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ​அதாவது வரும் நவம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த ஸ்பந்தனா பாலி இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  தி ட்ரைல் படத்தின் டீஸர், யுக் ராம் கதாபாத்திரத்தைச் சுற்றியுள்ள மர்மத்தைக் குறிக்கும் வகையில் தான் இருந்தது. யூடியூப் உலகில் தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள வம்சி கொடு போலீஸ் அதிகாரியாக அழுத்தமான பாத்திரத்தில் நடித்துள்ளார். 

படத்தின் இயக்குநர் ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி என்பதால் ஒரு தனித்துவமான கதையில், பல நிஜ உலக காட்சிகளை திரைக்கதையில் சேர்த்துள்ளார். இதனால் கிரைம் திரில்லர் ரசிகர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஒரு நல்ல அனுபவத்தைத் தரும். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்