தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ht Exclusive: ‘அஜித், எஸ்.எஸ்.சக்கரவர்த்தி இடையே இது தான் பிரச்னை’ - போட்டு உடைத்த வலைப்பேச்சு அந்தணன்

HT Exclusive: ‘அஜித், எஸ்.எஸ்.சக்கரவர்த்தி இடையே இது தான் பிரச்னை’ - போட்டு உடைத்த வலைப்பேச்சு அந்தணன்

Aarthi V HT Tamil
Apr 29, 2023 11:47 AM IST

வலைப்பேச்சு யூ-டியூப் சேனல் பத்திரிக்கையாளர் அந்தணன் மறைந்த எஸ்.எஸ்.சக்கரவர்த்தி, அஜித் இடையே ஏற்பட்ட பிரச்னை குறித்து நமது இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுக்கு பிரத்தேயக பேட்டி அளித்து உள்ளார்.

இந்துஸ்தான் டைம்ஸ்  பேட்டி
இந்துஸ்தான் டைம்ஸ் பேட்டி

ட்ரெண்டிங் செய்திகள்

அஜித்தை வைத்து நிறைய ஹிட் படங்கள் தயாரித்த எஸ்.எஸ்.சக்கரவர்த்தியை ஏன் அஜித் சென்று பார்க்கவில்லை என்ற கேள்வி எழுந்து உள்ளது.

இது குறித்து நாம் வலைப்பேச்சு யூ-டியூப் சேனல் பத்திரிக்கையாளரான அந்தணனிடம் பேசினோம். இதோ இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுக்கு அவர் அளித்த பேட்டி..

எஸ்.எஸ்.சக்கரவர்த்தி மற்றும் அஜித் கூட்டணி படங்கள் பற்றி உங்கள் கருத்து?

அஜித்தை வைத்து நிறைய படம் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி செய்து இருக்கிறார். இரண்டு பேரும் ஆரம்பத்தில் இருந்து நெருங்கிய நண்பர்கள். அஜித் மற்றும் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தோல்வியை சந்தித்த சமயத்தில் நண்பர்களாக மாறி அடுத்தடுத்த படங்களில் கூட்டணி அமைத்து கொண்டனர்.

அவர்களின் கூட்டணி படங்களில் நிறைய வெற்றி படங்கள் இருக்கிறது. உதரணத்திற்கு வாலி, வில்லன், முகவரி, வரலாறு ஹிட்டனது.

அஜித், சக்கரவர்த்தி இடையே பிரச்னை இருப்பதாக சொல்லப்படுகிறது. அதற்கு என்ன காரணமாக இருக்கும்?

அஜித், சக்கரவர்த்தி இடையே பிரச்னை இருப்பது உண்மை தான். அதற்கு நிறைய காரணம் சொல்லப்பட்டது. அதில் ஒன்று, அஜித் தன் நண்பர் என்ற நம்பிக்கையின் பேரில் நிறைய செக்கில் கையெழுத்து போட்டு சக்கரவர்த்தியிடம் கொடுத்து இருக்கிறார்.

அதை வைத்து சக்கரவர்த்தி நிறைய இடங்களில் பைன்னஸ் வாங்கி வேறு விதமாக பயன்படுத்தி கொண்டார். அதனால் தான் அஜித் வருத்தப்பட்டு அவரை விட்டு விலகிவிட்டதாக சொல்லப்படுகிறது. இது அப்போதைய காலக்கட்டத்தில் பரவலாக பேசினார்கள்.

ஆனால் நான் ஒரு முறை சக்கரவர்த்தியிடம் அஜித் பற்றி பேசினேன். அப்போது அவர், தான் அஜித் படத்தை மட்டும் தான் எடுக்கிறேன் என சொல்கிறார்கள்? ஆனால் உண்மையில் அந்த நேரத்தில் அவர் மார்க்கெட் எப்படி இருந்ததோ அதற்கு ஏற்ற சம்பளத்தை கொடுத்து தான் படம் எடுத்தேன்.

அவர் இது போன்று சொன்ன பிறகு அஜித்தை பயன்படுத்தி கொண்டு சக்கரவர்த்தி பணத்தை எடுத்து கொண்டார் என பேசப்பட்ட விஷயத்திற்கான அடிப்படை முகாந்திரமே இல்லையே என நினைத்தேன்.

அஜித் ஏன் எஸ்.எஸ்.சக்கரவர்த்திக்கு உடம்பு சரியில்லாத நேரத்தில் உதவி செய்யவில்லை?

எஸ்.எஸ்.சக்கரவர்த்திக்கு உடம்பு சரியில்லாத நேரத்தில் கூட காசு பிர்சனை இல்லை. அவர் பிரபலங்களிடம் உதவி கேட்க வேண்டிய அவசியம் தேவைப்படவில்லை.

அஜித் சமூக வலைதளங்கள் தொடர்பு அனைத்தையும் விட்டு விலகி இருக்கிறார். அவரிடம் ஒரு தகவலை கொண்டு சேர்த்தால் மட்டுமே அதை தெரிந்து கொள்ள கூடிய சூழல் இருக்கிறது. அவருக்கு  சக்கரவர்த்தி பற்றி தெரிந்து இருந்தால் உதவி செய்து இருப்பார்” என்றார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

IPL_Entry_Point

டாபிக்ஸ்