Ethirneechal: காணமால் போன அப்பத்தா.. வெகுண்டெழுந்த குடும்பம்.. ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் - எகிறும் எதிர்நீச்சல்!-ethirneechal serial today episode youtube promo - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ethirneechal: காணமால் போன அப்பத்தா.. வெகுண்டெழுந்த குடும்பம்.. ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் - எகிறும் எதிர்நீச்சல்!

Ethirneechal: காணமால் போன அப்பத்தா.. வெகுண்டெழுந்த குடும்பம்.. ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் - எகிறும் எதிர்நீச்சல்!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 24, 2023 11:39 AM IST

எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய புரமோ வெளியாகி இருக்கிறது.

எதிர்நீச்சல் புரமோ!
எதிர்நீச்சல் புரமோ!

இந்த சீரியலுக்கு இவ்வளவு பெரிய மார்க்கெட் வந்ததற்கு அந்த சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் மாரிமுத்துவின் நடிப்பும் முக்கிய காரணம் என்று சொல்லலாம்.

குணசேகரின் சுயரூபத்தை தெரிந்து கொண்ட ஜனனி வீட்டில் உள்ளவர்களிடம் அவரைப்பற்றி சொல்கிறாள். இதனையடுத்து அனைவரும் அவருக்கு எதிராக திரும்புகிறார்கள். இதனிடையே அப்பாத்தாவின் 40 சதவீத பிரச்சினை பூதாகாரமாக வெடித்து இருக்கிறது. 

எப்படியும் தன்னிடம் இருந்து ஜீவானந்தம் கைப்பற்றிய அப்பத்தாவின் சொத்துக்களை மீட்டு ஆக வேண்டும் என்று குணசேகரன் கங்கணம் கட்டிக்கொண்டு அலைய, ஜீவானந்ததை கொலை செய்யும் அளவிற்கு துணிந்தார்.

அதில் அவர் தப்பினாலும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்டு விட்டார். இப்படி விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் நேற்று கதிர் எதிர்பார்த்ததிற்கு மாறாக குணசேகரன் பக்கம் சாய்ந்து விட்டார்.

இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான புரமோ வெளியாகி இருக்கிறது. அதில் அனைவரும் பேசிக்கொண்டிருக்க ஜனனி இவங்கதான் ஜீவானந்தம் மனைவியை கொன்று இருப்பார்கள் என்று சொல்ல நந்தினி ஆமாம் எனக்கும் அந்த சந்தேகம் இருக்கிறது என்று சொல்கிறாள்.

இதனிடையே அப்பத்தா காணமால போனது குறித்து பேசிய குணசேகரன், வீட்டில் இத்தனை பேர் இருக்கிறோம் எப்படி அந்தக்கிழவி காணமால் போனார் என்ற கத்த, எதிர்குரலாய் ரேணுகா உங்கள் தம்பியையும்தான் காணோம் என்று கேட்க 

சுற்றி இருப்பவர்கள் என்ன செய்தீர்கள் அப்பத்தாவை என்று வளைத்து வளைத்து கேட்க குணசேகரன் முறைத்துக்கொண்டு நிற்கிறார்.

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.