தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actor Vijay Meet Students : கல்வி விருது விழா.. விஜய்க்கு பரிசளிப்பதற்காக மாணவி வரைந்த ஓவியம்!

Actor Vijay Meet Students : கல்வி விருது விழா.. விஜய்க்கு பரிசளிப்பதற்காக மாணவி வரைந்த ஓவியம்!

Divya Sekar HT Tamil
Jun 17, 2023 10:55 AM IST

நடிகர் விஜய்யின் கல்வி விருது விழாவுக்கு தீவிர ரசிகையான ஒருவர் விஜய்க்கு பரிசளிப்பதற்காக அவர் கையால் வரைந்த ஓவியத்தை கொண்டு வந்துள்ளார்.

மாணவி வரைந்த ஓவியம்
மாணவி வரைந்த ஓவியம்

ட்ரெண்டிங் செய்திகள்

 இதற்கான நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் சுமார் 1,500 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்நிகழ்ச்சியையொட்டி, மாணவர்கள் அனைவரும் பெற்றோர்களுடன் நேற்று சென்னை அருகே வந்து தங்க வைக்கப்பட்டனர். இன்று காலை உணவை முடித்துக் கொண்டு வண்டலூர், கேளம்பாக்கம் வழியாக வந்து நீலாங்கரையை சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கட் அவுட், பேனர் வைக்க கூடாது என்று ரசிகர்களுக்கு விஜய் அன்பு கட்டளையிட்டுள்ளார். ஏராளமான ரசிகர் பட்டாளம் வைத்துள்ள நடிகர் விஜய் புதிய முன்னெடுப்பாக தொகுதிவாரியாக மாணவ, மாணவிகளை சந்திப்பது அரசியல் அரங்கிலும் எதிரொலித்துள்ளது.

இன்று 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் சான்றிதழ் வழங்க உள்ளார் நடிகர் விஜய். அதன்படி முதல் இடம் பிடித்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும், 3-ம் இடம் பிடித்தவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும் காசோலையாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில்,செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த சுஜனா என்ற மாணவி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 592 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் தீவிர விஜய் ரசிகை. அதனால் இந்த மாணவி விஜய்க்கு பரிசளிப்பதற்காக அவர் கையால் வரைந்த ஓவியத்தை கொண்டு வந்துள்ளார். இந்த ஓவியம் தற்போது வைரலாகி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்