தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Naa Ready: நா ரெடி பாடலுக்கு எழுந்த சர்ச்சை - அதிரடி மாற்றம் செய்த லியோ படக்குழு

Naa Ready: நா ரெடி பாடலுக்கு எழுந்த சர்ச்சை - அதிரடி மாற்றம் செய்த லியோ படக்குழு

Aarthi V HT Tamil
Jun 28, 2023 10:38 AM IST

நா ரெடி பாடலில் லியோ படக்குழு மாற்றம் கொண்டு வந்து உள்ளது.

நா ரெடி பாடல்
நா ரெடி பாடல்

ட்ரெண்டிங் செய்திகள்

நா ரெடி பாடலில் நடிகர் விஜய் சிகரெட்டுடன் நடனமாடியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்பாடல் ரவுடிசத்தை உருவாக்கும் வகையில் இருப்பதாகக் கூறி நடிகர் விஜய் மீதுசென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்து இருந்தார்.

அந்த புகார் மனுவில், இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் புழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் லியோ பாடல் இருக்கிறது. அதனால் லியோ படத்தின் நா ரெடி பாடலை தடை செய்ய வேண்டும். போதைப்பொருள் புழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும், ரவுடிசத்தை உருவாக்கும் வகையிலும் பாடல் உருவாக்கப்பட்டு உள்ளது.

அதனால் நடிகர் விஜய் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தி இருந்தார். இந்த விவகாரம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக போய் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தொடர்ந்து நா ரெடி பாடலுக்கு எழுந்த சர்ச்சைக்கு படக்குழு முற்றுப்புள்ளி வைத்து உள்ளது.

ஆம்.. நான் ரெடி பாடலில், லியோ படக்குழு ஒரு மாற்றத்தை செய்து உள்ளது. அதாவதது நா ரெடி பாடல் லிரிக் வீடியோவில், “புகை பிடித்தல் புற்று நோய் உண்டாக்கும், உயிரை கொல்லும்” என்ற எச்சரிக்கை வாசகம் இணைக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்